சுந்தரமூர்த்தி நாயனார் 1132. | துணையு மளவுமில் லாதவன் தன்னரு ளேதுணையாக் கணையுங் கதிர்நெடு வேலுங் கறுத்த கயலிணையும் பிணையும் நிகர்த்தகண் சங்கிலி பேரமைத் தோளிரண்டும் அணையு மவன்திரு வாரூர னாகின்ற அற்புதனே. | | 40 |
சாக்கிய நாயனார் 1133. | தகடன வாடையன் சாக்கியன் மாக்கல் தடவரையின் மகள்தனம் தாக்கக் குழைந்ததிண் டோளர்வண் கம்பர்செம்பொன் திகழ்தரு மேனியில் செங்க லெறிந்து சிவபுரத்துப் புகழ்தரப் புக்கவ னூர்சங்க மங்கை புவனியிலே. | | 41 |
திரிந்தது. இப்பெயரே 'இவர் வைதிக அந்தணர்' என்பதைக் காட்டும். 'வேதப் பொருளை அஞ்செழுத்தாய மந்திரத்தை விளம்பியல்லால் விளம்பான்' என்க. இதனால் இவர் "வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது - நாதன் நாமம் நமச்சி வாயவே" என்னும் துணிவினராய் இருந்தமை விளங்கும். 'பரன்பால்' என ஏழாவது விரிக்க. நித்த நியமம், நித்தியாக்கினி யோம்புதல். அதனை, 'பரன்பால் மன்னு நியமம்' என்றதனால், சிவாக்கினியாக வளர்த்தமை அறியப்படும். 'காந்தனாகிய வன்றொண்டன்' என்க. மேற்கூறிய கொள்கையும், ஒழுக்கமும் உடையவராய் இருந்தமையால் சுந்தர மூர்த்தி நாயனாரைத் தமக்கு ஆசிரியராகக் கொண்டு ஒழுகுகின்றார் என்க. இவரது வரலாறு வேறு புராணங்களில் சில பொருள்கள் கூடுதலாகச் சொல்லப்படுகின்றது. 1132. குறிப்புரை: துணை - ஒப்பு, பிணை - பெண் மான் என்றது அதன் பார்வையை. சங்கிலி, சங்கிலி நாச்சியார். அமைத் தோள் - மூங்கில்போலும் தோள். 1133. குறிப்புரை: சாக்கியன் - பௌத்த மத வேடத்தை மாற்றிக் கொள்ளாதவன். அவ்வேடத்தையுடையவர்கள் மருதம் துவர் தோய்ந்த ஆடையை அணிவர் ஆதலாலும், அந்த ஆடை கெட்டியாய்த் துவளாது நிற்கும் ஆதலாலும் 'தகடு அன்ன ஆடையன்' என்றார். மாக்கல் - பெருங்கல். பெருங் கல்லாகிய வரை இமய மலை. "தென்குமரி வடபெருங்கல்"1 என்றார் சங்கப் புலவரும். கம்பர் - திருவேகம்பப் பெருமான். புவனி - பூமி.
1. புறம் - 17.
|