சிறப்புலி நாயனார் 1134. | புவனியில் பூதியும் சாதன மும்பொலி வார்ந்துவந்த தவநிய மற்குச் சிறப்புச்செய் தத்துவ காரணனாம் அவனியில் கீர்த்தித்தெ னாக்கூ ரதிப னருமறையோன் சிவனிய மந்தலை நின்றதொல் சீர்நஞ் சிறப்புலியே. | | 42 |
சிறுத்தொண்ட நாயனார் 1135. | புலியி னதளுடைப் புண்ணியற் கின்னமு தாத்தனதோர் ஒலியின் சதங்கைக் குதலைப் புதல்வ னுடல்துணித்துக் கலியின் வலிகெடுத் தோங்கும் புகழ்ச்சிறத் தொண்டன்கண்டீர் மலியும் பொழிலொண்செங் காட்டங் குடியவர் மன்னவனே. | | 43 |
சேரமான்பெருமாள் நாயனார் 1136. | மன்னர் பிரானெதிர் வண்ணா னுடலுவ ரூறிநீறார் தன்னர் பிரான்தமர் போல வருதலுந் தான்வணங்க என்னர் பிரானடி வண்ணா னெனவடிச் சேரனென்னுந் தென்னர் பிரான்கழ றிற்றறி வானெனும் சேரலனே. | | 44 |
1134. குறிப்புரை: பூதி - விபூதி; திருநீறு. சாதனம் - உருத்திராக்கம்; இது சைவ மரபுப் பெயர். "ஆர்ந்து" என்பதை 'ஆர' எனத் திரிக்க. தவ நியமம் - தவமாகிய, தப்பாக்கடமை. இஃது இங்கு சைவாசாரத்தின்மேல் நின்றது. சிறப்பு, மேல்நிலையில் வைத்து வழிபடுதல். தத்துவம் - மெய்ம்மை; அஃதாவது, உளமார நேர்ந்து செய்தல். காரணன் - செய்பவன்; கருத்தா. தலை நிற்றல் - பற்றி நிற்றல். 'சிறப்புலி' - என்பது பெயர். 1135. குறிப்புரை: கலி, பிள்ளைக்கலி. அதைத் தொலைத்தமை, கறியாகச் சமைக்கப்பட்ட மகன் திருவருளால் மீண்டும் முன்போல உயிர்பெற்று எழுந்து வரப் பெற்றமை. கண்டீர், முன்னிலையசை. "தனது புதல்வன்" என்பதற்கு, மேல்1 "நினது அடியேம்" என்றதற்கு உரைத்ததை உரைக்க. 1136. குறிப்புரை: 'மன்னர்பிரான், தென்னர்பிரான், சேரலன்' என்பன ஒரு பொருள்மேல் வந்த பல பெயர்கள். உவர் - உவர் மண். ஊறி - ஊறியதனால். நீறு - திருநீறு. தன்னர்பிரான் தமர் போல - தம்மைப் போல்பவர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமானுக்குத் தொண்டராயினார்போல. என்னர்பிரான் - என்போன்ற குடி
1. பாட்டு - 35.
|