பக்கம் எண் :

81சேத்திரத் திருவெண்பா

146.

கடுவடுத்த நீர்கொடுவா; காடிதா என்று
நடுநடுத்து நாஅடங்கா முன்னம் - பொடியடுத்த
பாழ்க்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்
கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.

2

147.

குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி,
நொந்திருமி, ஏங்கி, நுரைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.

3

148.

காளை வடிவொழிந்து கையுறவோ(டு) ஐயுறவாய்
நாளும் அணுகி நலியாமுன் - பாளை
அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற்(கு) ஆளாய்க்
கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.

4


146. அ. சொ. பொ.: கடு - கடுக்காய்; ‘இது பித்தத்தைப் போக்குவது’ என்பர். காடி - பழஞ்சோற்று நீர். இதுவும் அத்தன்மையதாதலோடு உணவும் ஆகும். ‘வெடுவெடுத்தல்’ என்பது போல, நடுநடுத்தல், நடுக்கத்தைக் குறித்ததோர் இரட்டைக் கிளவி. நா அடங்குதல் - பேச்சு நீங்குதல். பொடி - சாம்பல். பாழ்க் கோட்டம் - அழிவிடம், மயானம். தென் குடந்நை - தென்னாட்டில் உள்ளதாகிய ‘திருக்குடமூக்கு’ என்னும் தலம். தென், அழகும் ஆம், செப்பி - துதித்து. “கிட” என்றது ‘நிலைமாறு தலை விடுக’ என்றபடி. இது முதலாக இனி வரும் வெண்பாக்களில் வேண்டும் இடங்களில் ‘நெஞ்சே’ என்பது வருவிக்க. “முன்னம், முன்” என்பன செவ்வெண்.

147. அ. சொ. பொ.: குந்தி நடத்தல் - நெடுக நடந்துபோக இயலாமல் இடையிடையே குந்திக் குந்தி எழுந்து நடத்தல். “ஐ” இரண்டில் முன்னது கோழை. அது நுரைத்து, மேலே ஏறி, வெளி வந்து, ஓட்டெடுத்து வாய் ஆறு (வாய்வழியால்) பாயா முன்’ என்க. ஐயாறு, சோழ நாட்டுத் தலம். தலப் பெயரைச் சொல்லுதலும் அங்குள்ள இறைவன் பெயரைச் சொல்லு தலோடே ஒக்கும். இனி, “ஐயாறு” என்பது ஆகுபெயரில் அங்கு எழுந்தருளியுள்ள இறைவனைக் குறித்தது என்றலும் ஆம், பின்னிரண்டடிகள் ‘மடக்கு’ என்னும் சொல்லணி பெற்றன.

148. அ. சொ. பொ.; காளை - கட்டிளைஞன். இஃது அப்பருவத்தைக் குறித்தது. கையளவு - செயலற்ற நிலை. ஐயுறவு - சந்தேகித்தல், அஃது, ‘இன்றோ, நாளையோ வாழ்வு முடிவது’ எனப் பலரும் நினைப்பது. நாள் - இறுதி நாள். உம்மை, முன்னர்க் கூறியவற்றைத் தழுவிநின்றது. நலிதல் - அடர்த்தல். இதற்கு