பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை82

149.

வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்
குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து - கஞ்சி
அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே
திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.

5

150.

காலைக் கரையிழையாற் கட்டித்தன் கைஆர்த்து
மாலை தலைக்கணிந்து னமயெழுதி - மேலோர்
பருக்கோடி மூடிப் பலரழா முன்னம்
திருக்கோடி காஅடைநீ சென்று.

6

151.

மாண்டுவாய் அங்காவா முன்னம், மடநெஞ்சே
வேண்டுவா யாகி விரைந்தொல்லைப் - பாண்டவாய்த்
தென்னிடை வாய் மேய சிவனார் திருநாமம்
நின்னிடைவாய் வைத்து நினை.

7


வினைமுதலான ‘கூற்றுவன்’ எனத் தனிதத் தனி இயைக்க. “முகம்” என்றது தலையை. அதற்கும் “என்” என்பதனைக் கூட்டி, ‘என் முகம் (தலை) கவிழ்க; (வணங்குக) கை (கள்) கூம்புக’ என்க. இதிலும் திரிபணி வந்தது.

149. அ. சொ. பொ.: வஞ்சி - வஞ்சிக் கொடி. நுண்ணிடையார், தேவியார்; உயர்வுப் பன்மை. குஞ்சி - ஆடவர் தலை மயிர். அது விடாத ஆகுபெயராய், அஃது உள்ள தலையைக் குறித்தது. குறங்கு - துடை. இது தேவியாருடையது. ‘தேவியார் உனது தலையைத் தமது துடைமேற் கொண்டிருந்தது, - அருத்த ஒருத்தி கஞ்சி கொண்டு வா - என்னாமுன்’ என்க. ‘அருந்த’ என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. திருத்துருத்தி, சோழநாட்டுத் தலம். இது, ‘குத்தாலம்’ என வழங்குகின்றது.

150. அ. சொ. பொ.: ‘காலைக் கட்டி’ என இயையும். கரையிழை - பழந்துணியின் ஓரத்தில் உள்ள கரையைக் கிழித்து எடுத்து நீள் வடம். இறந்தோரது இரு காற் பெருவிரல்களையும் இத்தகைய இழையாற் சேர்த்துக் கட்டுதல் வழக்கம். “தன்” என்றது. ‘தன் பிணத்தினது’ என்றபடி. உடல் உயிருக்கு வேறாய் வீழ்ந்தமையின் பிறிதாகச் சொல்லப்பட்டது. கைகளையும் ஆட வொட்டாமல் கட்டுவர், ஆர்த்து - கட்டி. தலைக்கு மாலை சூட்டுதலும், கண்ணுக்கு மை யெழுதுதலும் பிணச் சிங்காரம். ‘மேல் மூடி’ என்க. பருக் கோடி - பெரிய புத்தாடை. ‘பருக் கோடியால் மூடி’ என்க. திருக்கோடிகா, சோழ நாட்டுத் தலம்.

151. அ. சொ. பொ.: அங்காத்தல் - திறத்தல். வேண்டு வாயாகி - விரும்புதல் தன்மையை உடையையாகி, விரைந்து விரைந்து