152. | தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே? நெடுங்களத்தான் பாதம் நினை. | | 8 |
153. | அழுகு திரிகுரம்பை ஆங்கதுவிட் டாவி ஒழுகும் பொழுதறிய ஒண்ணா - கழுகு கழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பாற் குழித்தண் டலையானைக் கூறு. | | 9 |
சென்று ஒல்லை - சீக்கிரமாக. ‘பண்டு’ என்பது முதல் நீண்டு ‘பாண்டு’ என வந்ததாகக் கொண்டு. பண்டே அவாவி இடைவாய் மேலே சிவனார்’ என்க. இனி, பாண்டத்தின் வாய் போலும் உனது வாயில் வைத்து’ என்றலும் ஆம். தென் இடைவாய் - தென்னாட்டில் உள்ள ‘இடைவாய்’ என்னும் தலம். சோழ நாட்டில் அண்மையில், ‘விடைவாய்’ - என்னும் தலத்து ஞானசம்பந்தர் திருப்பதிகம் ஒன்றைக் கல்வெட்டிலிருந்து கண்டு சென்னைச் சைவ சித்தாந்த மகாசமாசம் வெளியிட்டது.1 ‘இடைவாய்’ என்பது அத்தலத்தின் மறுபெயராகலாம். அல்லது வேறொரு வைப்புத் தலமாகவும் இருக்கலாம். இவ்வெண்பாக்களில் வைப்புத் தலங்களும் சில காணப்படுகின்றன. நின்னிடை - நின்னிடமாக. வாய் வைத்தல், வாசகமாகக் கணித்தல். நினைதல் - மரனதமாகக் கணித்தல். இவை ஒன்றின் ஒன்று மிக்கது. 152. அ. சொ. பொ.: துடிப்பு - இருதயத் துடிப்பு, நாடித் துடிப்பு முதலியன. பெட்ட - முன்பெல்லாம் பலராலும் விரும்பப்பட்ட. இது பழமையை நினைவு கூர்தல் கூறியது. பகர வொற்று விரித்தல். பேர், மாற்றுப் பேர். ‘அப்பனைக் கண்டேன், அம்மையைக் கண்டேன்’ எனற்பாலனவற்றை, ‘அப்பாவைக் கண்டேன், அம்மாவைக் கண்டேன்’ என்னும் நாட்டு வழக்குப் போல, ‘அத்தனை எடுங்கள்’ என்பது ‘அத்தாவை எடுங்கள்’ என வந்ததாகக் கொண்டு, இரண்டாம் உருபு விரித்துரைக்க. அல்லது, “அத்தா” என உரியவரை விளித்தது எனின், ஒருமைப் பன்மை மயக்கமாகும். இனி ‘அத்தான்’ எனப் பாடம் ஓதி, ‘அத்தன்’ என்பது நீண்டு வந்தது. எனினும் ஆம். இப்பொருட்கும் இரண்டன் உருபு விரிக்கப்படும். நெடுங்களம் சோழ நாட்டுத் தலம். ஏழை மடம், ஒரு பொருட் பன்மொழி. 153. அ. சொ. பொ.: திரி - கெட்டுப்போன. கெட்டது மூப்பினாலும், பிணியினாலும். குரம்பை - குடில். குடில் போலும் உடம்பு. ஆங்கது, ஒரு சொல் நீர்மைத்து. ஆவி - உயிர். ஒழுகுதல் -
1. 1973-ல்
|