பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை84

154.

படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட
முடியரசர் செல்வத்து மும்மைக் - கடியிலங்கு
தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்(டு)
ஓடேந்தி யுண்ப துறும்.

10

155.

குழீஇயிருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட
வழீஇயிருந்த அங்கங்கள் எல்லாந் - தழீஇயிருந்தும்
என்னானைக் காவா இதுதகா தென்னாமுன்
தென்னானைக் காஅடைநீ சென்று.

11


ஓட்டைக் குடத்தினின்றும் நீர் நீங்குதல் போல நீங்குதல். இது நீங்குதலே இயல்பாதலைக் குறித்தவாறு. அறிதல், இங்கு நினைத்தல் “கழித்து உண்டு அலையாமுன்” என்றாரேனும், ‘அலைந்து உண்டு கழியாமுன்’ என்றலே கருத்தென்க. தண்டலை - ‘தண்டலை நீணெறி’ என்னும் தலம். இது ‘குழித்தண்டலை’ என வழங்கினமை பெறப்படுகின்றது.

154. அ. சொ. பொ.: படி - நிலவுலகம். ‘ஒரு வெண்குடை’ என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. ‘கீழாக’ என ஆக்கம் வருவிக்க. “படி” என முன்னர் வந்தமையின், “பாரெலாம்” என்றது, ‘அவற்றை யெல்லாம்’ எனச் சுட்டுப் பெயரளவாய் நின்றது. ‘செல்வத்தின்’ என ஒப்புப் பொரு, அல்லது உறழ் பொருப் பொருட்டாகிய ஐந்தாவது விரிக்க. ‘செல்வத்தின்’ என்றே பாடம் ஓதலும் ஆம். மும்மை - மும்மடங்கு. ‘மும்மடங்கு உறும்’ என முடியும். உறும் - நன்றாம். கடி - வாசனை. தோடு - இதழ். “கடியிலங்கு ... உண்பது” என்பதனை முதலிற் கூட்டி யுரைக்க. ஓடு ஏந்துதல், எந்தி இரத்தலாகிய தன் காரியத்தைத் தோற்றி நின்றது. இந்நாயனார், மன்னர் எலாம் பணிசெய்ய அரசாண்ட பல்லவ மன்னராய் இருந்தும், “அரசா இன்னல்” எனத் துறந்தார் - என்று சேட்சிக் கிழார் கூறியதற்கு1 இவ்வெண்பாவும், இனிவரும் “தஞ்சாக மூவுலகும்” என்னும் வெண்பாவும் அகச் சான்றாய் நிற்றலை யறிக.

155. அ. சொ. பொ.: எவர் ஒருவர் இறப்பினும் இறந்த அத்துக்கக் குழுவினர் இறந்தவரது குற்றங்களை யெல்லாம் மறைத்து விட்டுக் குணம் சிலவேயாயினும் அவற்றை எடுத்துக் கூறிப்பாராட்டுதல் வழக்கம். வழுவுதல் - நிலைகெடுதல். அங்கங்கள் - உடல் உறுப்புக்கள். ‘எல்லாவற்றையும்’ என இரண்டாவதன் தொகை. “இருந்தும்” என்னும் உம்மையை வேறு வைத்து, அழுகை ஒலிக் குறிப்பாகக் கொள்க. “ஆனை” என்றது, காதல் பற்றி வந்த உபசார


1. பெரிய புராணம் - ஐயடிகள் காடவர்கோன் - 3