முழுநீறு பூசிய முனிவர் 1167. | உலகு கலங்கினு மூழி திரியினு முள்ளொருகால் விலகுத லில்லா விதியது பெற்றநல் வித்தகர்காண் அலகில் பெருங்குணத் தாரூ ரமர்ந்த வரனடிக்கீழ் இலகுவெண் ணீறுதம் மேனிக் கணியு மிறைவர்களே. | | 75 |
அப்பாலும் அடிச்சார்ந்தார் 1168. | வருக்க மடைத்துநன் னாவலூர் மன்னவன் வண்டமிழால் பெருக்கு மதுரத் தொகையிற் பிறைசூடி பெய்கழற்கே ஒருக்கு மனத்தொடப் பாலடிச் சார்ந்தவ ரென்றுலகில் தெரிக்கு மவர்சிவன் பல்கணத் தோர்நஞ் செழுந்தவரே. | | 76 |
இவர்கள் சிவ லோகத்தில் முக்கண், எண்தோள் முதலாகச் சிவனது உருவத்தைப் பெறுதல், கிரியையில் யோகமாகிய அகவழிபாட்டில் சிலோகம் பாவனையை மிகச் செய்தலினாலேயாம். தில்லைவாழ் அந்தணருட் சிறந்தார் சிலரும் சிவசாரூபிகளாய் நின்றமையைத் திருஞானசம்பந்தர் தாமும் கண்டு, திருநீல கண்டப் பாணர்க்கும் காட்டினமையை அவரது புராணத்தால் உணர்க. ஈறு இல் செல்வம் - தாம் வீடு பெற்ற பின்பும் நீங்காது இருந்தாங்கிருக்கும் செல்வம். இவை சுத்த தத்துவ புவனப் பொருள்களாம். ஆகவே, இவற்றைப் புசிக்கும் போகமும் சுத்த போகமேயாம். 1167.குறிப்புரை: "முழு நீறு" என்பதில் முழுமையை இலக்கண நிறைவு, உடல் நிறைவு இரண்டுமாகக் கொள்க. இவ் இரு பொருளும் இப்பாட்டில் "இங்கு" என்பதனாலும், "மேனிக்கு" என்பதனாலும் குறிக்கப்பட்டன. திரிதல் - மாறி வருதல். விலகுதல் - கைவிட்டு நீங்குதல். வித்தகர் - திறல் உடையார். காண், முன்னிலையசை. அலகு இல் பெருங்குணம், இறைமைக் குணம். 'குணத்து அரன்' என்க. "ஆரூர் அமர்ந்த அரன்" என்றது எங்கும் உள்ளவனை ஓரிடத்தில் வைத்துக் கூறியவாறு. 'அரன் அடிக்கீழ் நின்று' என ஒரு சொல் வருவிக்க. இறைவர்கள், கட்புலன் ஆகும் இறைவர்கள். "நடமாடக் கோயில் நம்பர்"1 எனத் திருமுறையிலும், "பராவு சிவர்" எனச் சாத்திரத்திலும்2 சொல்லப்பட்டன. 1168. குறிப்புரை: "வருக்கம் அடைத்து" என்பதை, "மதுரத் தொகையில்" என்பதன் பின்னர்க் கூட்டுக. வருக்கம் - இனம்; அடியார் இனம் "அடைத்து" என்பதை 'அடைக்க' எனத் திரித்து,
1. திருமந்திரம் - 1.8.57. 2. சிவஞான சித்தி - சூ.8.39.
|