பக்கம் எண் :

821திருத்தொண்டர் திருவந்தாதி

பூசலார் நாயனார்

1170.பதுமநற் போதன்ன பாதத் தரற்கொரு கோயிலையான்
கதுமெனச் செய்குவ தென்றுகொ லாமென்று கண்துயிலா
ததுமனத் தேயெல்லி தோறும் நினைந்தருள் பெற்றதென்பர்
புதுமணத் தென்றல் உலாநின்ற வூர்தனிற் பூசலையே.

78

மங்கையர்க்கரசியார்

1171.பூச லயில்தென்ன னார்க்கன லாகப் பொறாமையினால்
வாச மலர்க்குழல் பாண்டிமா தேவியாம் மானிகண்டீர்
தேசம் விளங்கத் தமிழா கரர்க்கறி வித்தவரால்
நாசம் விளைத்தா ளருகந் தருக்குத்தென் னாட்டகத்தே.

79

நேச நாயனார்

1172.நாட்டமிட் டன்றரி வந்திப்ப வெல்படை நல்கினர்தந்
தாட்டரிக் கப்பெற் றவனென்பர் சைவத் தவரரையில்
கூட்டுமக் கப்படம் கோவணம் நெய்து கொடுத்துநன்மை
ஈட்டுமக் காம்பீலிச் சாலிய நேசனை இம்மையிலே.

80


1170.குறிப்புரை: கதுமென - விரைவாக, எல்லி - இரவு. இரவு உறங்காமை கூறவே, பகல் உறங்காமை சொல்ல வேண்டாவாயிற்று. 'அருள்பெற்றது நினைந்து' என மாற்றிக் கொள்க. எழுவாய் தொழிற்பெயராய வழி பயனிலை வினையெச்சமாய் வருதல் உண்டு. என்பர் - என்று புகழ்வர்.

1171.குறிப்புரை: பூசல் அயில் தென்னனார் - போரை வெல்லும் வேற்படையையுடைய பாண்டியர். "தென்னவனார்" எனக் குடிப்பெயர் ஈற்று 'அன்'னின் முன்னும், 'ஆர்' விகுதி வந்தது. அனல் - சமணர் திருஞான சம்பந்தரது திருமடத்தில் இட்ட. ஆக - வந்து பற்ற. 'அவர் (பாண்டியர்) பொறாமை யினால்' என்க. "கண்டீர்" என்னும் முன்னிலை அசையை, "நாசம் விளைத்தாள்" என்பதன் பின்னர்க் கூட்டி முடிக்க. தமிழாகரர் - திருஞானசம்பந்தர்.

1172.குறிப்புரை: நாட்டம் - கண். இட்டு - மலராக இட்டு. அரி - திருமால். வந்திப்ப - வழிபட. வெல்படை, இங்குச் சக்கரம். தாள் தரிக்கப்பெற்றவன் - திருவடியைத் தலையிலே சூட்டிக் கொள்ளப்பெற்றவன். சைவத்தவர் - சைவ சந்நியாசிகள். அக்கம் + படம் = அக்கப்படம். அக்கம் - கண். படம் - துணி. அக்கப்படம் - கண் போலக் காக்கும் துணி; என்றது கீளினை. நன்மையாவது சிவ