கோச்செங்கட் சோழ நாயனார் 1173. | மைவைத்த கண்டன் நெறியன்றி மற்றோர் நெறிகருதாத் தெய்வக் குடிச்சோழன் முன்பு சிலந்தியாய்ப் பந்தர்செய்து சைவத் துருவெய்தி வந்து தரணிநீ டாலயங்கள் செய்வித்த வன்திருக் கோச்செங்க ணானென்னுஞ் செம்பியனே. | | 81 |
1174. | செம்பொ னணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோகமெய்தி நம்பன் கழற்கீ ழிருந்தோன் குலமுத லென்பர்நல்ல வம்பு மலர்த்தில்லை யீசனைச் சூழ மறைவளர்த்தான் நிம்ப நறுந்தொங்கல் கோச்செங்க ணானென்னும் நித்தனையே. | | 82 |
புண்ணியம். காம்பீலி நகரம். 'நேசனை. 'இம்மையிலே தாள் தரிக்கப் பெற்றவன்' என்பர் எனக் கூட்டுக. 'மறுமையில் அடையற்பாலதாகிய சிவனடி நிழலை இம்மையிலே அடைந்தவன்' என்றபடி. 1173. குறிப்புரை: 'மற்றோர் நெறி கருதாத் தெய்வக் குடியில் பிறந்த சோழன்' என்க. 'சோழன்' என்பது குடிப்பெயர் ஆதலின் "தெய்வக் குடி" என்றது அக்குடியையேயாதல் தெளிவு. முன்பு - முற்பிறப்பு. பந்தர் செய்தது, வாய் நூலால் திருவானைக்காவல் இறைவற்கு. எய்தி - வந்து. சைவத்து உரு எய்தி சைவ சமயியாய்ப் பிறந்து. தரணி, சோழநாடு, நீடு ஆலயங்கள் - உயர்ந்த மாடக் கோயில்கள். செம்பியன் - சோழன். இந் நாயனார் சிவன் அருளால் தமது முற்பிறப்பின் நிலையை அறிந்திருந்தார். 1174. குறிப்புரை: 'சிற்றம்பலத்தைச் செம்பொன் அணிந்தவன் ஆதித்த சோழன்' என்பதை மேலே1 கூறினார். முதல் - மூதாதை. வம்பு - வாசனை. மறை வளர்த்தது, தில்லை வாழ் அந்தணர்களுக்கு மாளிகைகளை அமைத்துக் கொடுத்து அவர்களால் வேதத்தை நியமமாக ஓதச் செய்தமையாலாம். நிம்ப நறுந்தொங்கல் - வேப்பம்பூ மாலை. பாண்டியர்க்கு உரிய இதனை இவர்க்குக் கூறியது பாண்டிய நாட்டைப் பற்றினமை பற்றியாம். இவர் சேரரை வென்றமை சங்க இலக்கியத்தால் அறியப்படுகின்றது. பாண்டியரை வென்றதை இதனால் அறிகின்றோம். நித்தன் - என்றும் அழியாத புகழ்உடம்பைப் பெற்றவன்.
1. பாட்டு - 65.
|