பக்கம் எண் :

823திருத்தொண்டர் திருவந்தாதி

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

1175.தனையொப் பருமெருக் கத்தம் புலியூர்த் தகும்புகழோன்
நினையொப் பருந்திரு நீலகண் டப்பெரும் பாணனைநீள்
சினையொப் பலர்பொழில் சண்பையர் கோன்செந் தமிழொடிசை
புனையப் பரனருள் பெற்றவ னென்பரிப் பூதலத்தே.

83

சடைய நாயனார்

1176.தலம்விளங் குந்திரு நாவலூர் தன்னில் சடையனென்னுங்
குலம்விளங் கும்புக ழோனையுரைப்பர் குவலயத்தில்
நலம்விளங் கும்படி நாம்விளங் கும்படி நற்றவத்தின்
பலம்விளங் கும்படி யாரூ ரனைமுன் பயந்தமையே.

84

இசைஞானியார்

1177.பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள் ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக்
கயந்தா னுகைத்தநற் காளையை யென்றுங் கபாலங்கைக்கொண்

1175.குறிப்புரை: 'நினைய' என்பதன் இறுதி நிலை தொகுக்கப்பட்டது. சினை - கிளை. 'சினை ஒப்ப' என்பதில் "ஒப்ப" என்பதும் அவ்வாறு நின்றது. ஒப்ப அலர்தல் - யாவும் ஒன்றுபோல மலர்களைப் பூத்தல். சண்பை - சீகாழி. சண்பையர் கோன், திருஞான சம்பந்தர். 'அவரது செந்தமிழோடு' என்க.

1176. குறிப்புரை: முதற்கண் உள்ள "விளங்கும்" என்னும் பெயரெச்சம், "திருநாவலூர்" என்னும் ஏதுப்பெயர் கொண்டது. உரைப்பர் - புகழ்வர். ஆரூரன், நம்பியாரூரன். சுந்தர மூர்த்தி நாயனார். 'பயந்தமை சொல்லி' என ஒருசொல் வருவித்து, "உரைப்பர்" என்பதனோடு முடிக்க. குவலயம் - நில வட்டம். அதன் நலமாவது, முற்செய் தவத்தோரும் அதன் பயனைப் பெற நிற்பது. "நாம்" என்றது தம்மையும் உளப் படுத்துச் சிவனடியார்களை. பலம் - பயன். நற்றவத்தின் பயன் அடியார் பெருமையை அறிதல். அதனை அறிதலானே மக்கள் மக்களாய் விளங்குவர் ஆதலின் அது பற்றியே "நாம் விளங்கும்படி" என்றார். 'இவையெல்லாம் நம்பியாரூரர் திருநாவலூரில் சடையனார்பால் அவதரித்துத் திருத்தொண்டத் தொகையை அருளிச்செய்தமையாலே' என்றபடி.

1177.குறிப்புரை: 'வெள்ளைக் கயந்தான் உகைத்த நற்காளையைப் பயந்தாள்' என்றும், 'அரன் புனிதனவன் திருத்தாள்