| டயந்தான் புகுமர னாரூர்ப் புனிதன் அவன்திருத்தாள் நயந்தாள் தனதுள்ளத் தென்று முரைப்பது ஞானியையே. | | |
சுந்தரமூர்த்தி நாயனார் 1178. | ஞானவா ரூரரைச் சேரரை யல்லது நாமறியோம் மானவ வாக்கை யொடும்புக் கவரை வளரொளிப்பூண் வானவ ராலும் மருவற் கரிய வடகயிலைக் கோனவன் கோயில் பெருந்தவத் தோர்தங்கள் கூட்டத்திலே. | | |
தனது உள்ளத்து நயந்தாள் என்றும் (அறிந்தோர்) உரைப்பது ஞானியையே - எனக் கூட்டி முடிக்க. கறுவு - பிறர் செய்த தீமையை மறவாது உட்கொண்டிருத்தல்; இஃது இன அடை. பொள்ளல் - புழை. கயம் - யானை. உகைத்தது - ஊர்ந்தது "யானையை 'காளை' என்றல் சுந்தரர்க்கு ஏற்புடையதே. அவர் வெள்ளை யானையை ஊர்ந்த காளை" என்றது நயம். ஊர்ந்தது கயிலை செல்லுங்கால் ஐயம், 'அயம்' எனப் போலியாயிற்று. ஐயம் - பிச்சை. "அவன்", பகுதிப் பொருள் விகுதி. உரைத்தற்கு வினைமுதல் வருவித்துக் கொள்க. உரைப்பது, தொழிற்பெயர். 'உரைப்பது தெளிவு' எனப் பயனிலையை வருவித்துக் கொள்க. தொழிற்பெயர் எழுவாயாய் நிற்குமிடத்துப் பயனிலையை இவ்வாறு சொல்லெச்சமாக வைத்துப் போதல் ஒரு நடை. இசை ஞானியை 'ஞானி' எனச் சுருங்கக் கூறினார். 'இவரது (இசைஞானியாரது) பிறந்தகம் திருவாரூர் ஆதல் வேண்டும்' என ஆராய்ச்சியாளர் கருதுவர். இங்கு, "ஆரூர்ப் புனிதனவன் திருத்தாள் தனது உள்ளத்து நயந்தாள்" எனக் கூறியிருப்பது அக்கருத்திற்கு அரண் செய்வதாய் உள்ளது. இன்னும் அக்கூற்றினாலே, 'ஆரூர்ப் பெருமானை நோக்கி இவர் செய்த தவத்தானே திருக்கயிலையில் இருந்த ஆலால சுந்தரரைத் தமக்கு மகனாகப் பெறும் பேற்றைப் பெற்றார்' எனவும், அதனானே அந்த ஆரூர்ப் பெருமான் பெயரே இவருக்குப் பெயராக இடப்பட்டது' எனவும் கருத இடம் உண்டு. 1178.குறிப்புரை: "மாலை யாக்கையொடும் புக்கவரை" என்பதை முன்னே கூட்டி, அதனோடும் முதல் அடியை ஈற்றிற் கூட்டுக. "புக்கவர்" என்றதும் பின்வரும் இருவரையே "வடகயிலை" எனப் பின்னர் வருதலின் வாளா, "புக்கவரை" என்றார். மானவ யாக்கை - உடல். மனித உடலை நீக்காமலே கயிலை அடைந்தவர்கள் சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் தவிரப் பிறர் ஒருவரும் சொல்லப்படவில்லை. கயிலையை அடைந்த பின்னர் அவர்களது உடம்பு வேற்றியல்பைப் பெற்றிருக்கலாம். இது,
|