பக்கம் எண் :

825திருத்தொண்டர் திருவந்தாதி

திருத்தொண்டத்தொகையில் உள்ள தொகையடியார்கள் தனியடியார்கள்

1179.கூட்டமொன் பானொ டறுபத்து மூன்று தனிப்பெயரா
ஈட்டும் பெருந்தவத் தோரெழு பத்திரண் டாம்வினையை
வாட்டுந் தவத்திருத் தொண்டத் தொகைபதி னொன்றின்வகைப்
பாட்டுந் திகழ்திரு நாவலூ ராளி பணித்தனனே.

87


களையா உடலொடு சேரமான், ஆரூரன்
விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ள1

என ஒன்பதாம் திருமுறையிலும் எடுத்தோதப்பட்டது.

இனிச் சண்டேசுர நாயனாரைச் சேக்கிழார்,

அந்த உடம்பு தன்னுடனே

அரனார் மகனா ராயினார்

எனக் கூறியது,

செங்கண் விடையார் திருமலர்க்கை

தீண்டப் பெற்ற சிறுலனார்

அங்கண் மாயை யாக்கையின்மேல்

அளவின் றுயர்ந்த சிவமயமாய்

எனச் சிவபெருமான் செய்த பரிச தீக்கையால் என்பதை விளக்கினார். சேரரும், ஆரூரரும் அது செய்யப்படவில்லை. "பெறுமவற்றுள் யாம் அறிவதில்லை" என்பதிற் போல, அறிதல், இங்கு நன்கு மதித்தல்.

1179. குறிப்புரை: கூட்டம் - தொகை. எனவே, 'திருத்தொண்டத் தொகையிற் சொல்லப்பட்ட நாயன்மார்களில் ஒன்பதின்மர் தொகையடியார்கள்' எனவும் கூறியதாயிற்று. 'பதினொன்று' என்றது பாடல் தொகை. எனவே, 'பாட்டுப் பதினொன்றின் வகை, ஒன்பானொடு, தனிப்பெயர் எழுபத்திரண்டாப் பணித்தனன்' என்பது கொண்டு கூட்டாயிற்று. "வினையை" என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. "பாட்டும்" என்னும் உம்மும், மேற்போந்த ஒன்பது, அறுபத்தொன்றாய்ப் பாகுபட்டமையைத் தழுவிற்று.


1. பதிகம் - 1.9.5.