1218. | புலையடித் தொண்டனைப் பூசுர னாக்கிப் பொருகயற்கண் மலைமடப் பாவைக்கு மாநட மாடும் மணியையென்தன் தலையிடைப் பாதனைக் கற்றாங் குரைத்தசம் பந்தனென்னா, முலையிடைப் பொன்கொண்டு, சங்கிழந் தாளென்தன் மொய்குழலே. | | 37 | 1219. | குழலியல் இன்கவி ஞானசம் பந்தன் குரைகழல்போல் கழலியல் பாதம் பணிந்தே னுனையுங் கதிரவனே! |
'அமரர் தொழ இருப்பாரும், அருநரகில் தளர்வாரும் (யாவர் என்னில்) கொச்சையர்கோன் அடி பணிந்தாரும், அல்லாத புலையருமே' - என முடிக்க. புலையர் - கீழ்மையர். ஏகாரம் பிரிநிலை. 1218. குறிப்புரை: இப்பாட்டு, கைக்கிளைத் தலைவி ஆற்றாமை கண்டு செவிலி இரங்கியது. 'புலைத் தொண்டன், அடித்தொண்டன்' எனத் தனித் தனி முடிக்க. புலை - கீழ்மை; நெறிப்பா டின்மை. ஆசிரியர் புலை அடித் தொண்டனைப் பூசுரன் ஆக்கியதாகக் கூறியது தம்மைக் குறித்தேயாயினும் அதனைச் செவிலி கூற்றாகக் கூறினமையால், "தொண்டனை" என்பதற்குத் 'தொண்டன் ஒருவனைப் பூசுரன் ஆக்கி' எனப் பொருள் கொள்க. ஆசிரியர் இவ்வாறு கூறியது, 'யான் பூசுரனாய்ப் பிறந்தும் அதற்கேற்ற செயலை உடையனாயினேன் இல்லை' என்னும் இரக்கத்தினாலாம். இஃது அவர் தம் பெருமையை உணர்த்துகின்றது. பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை அணியுமாம் தன்னை வியந்து1 என்ப ஆகலின். பாவைக்கு - பாவை பொருட்டாக; 'அவள் காணும்படி' என்பதாம். தலையிடைச் 'சூட்டியபாதன்' என்க. கற்றல், இங்கு, உணருமாறெல்லாம் உணர்தல். என்னா - என்று சொல்லிச் சொல்லி; 'பிதற்றி' என்றபடி. பொன் - பசலை. சங்கு சங்க வளையல், "பொன் கொண்டு சங்கு இழந்தாள்" - என்பது 'பரிவருத்தனை' - என்னும் அணியாம். சங்கைக் கொடுத்துப் பொன்னை விலையாகப் பெறும் வழக்கம் அந்நாளில் இருந்தது. 1219. குறிப்புரை: இப்பாட்டு, தலைவி தலைவனுடன் உடன்போக்காகப் போயினமை கேட்டு நற்றாய் சுரம் தணிவித்து இரங்கியது. சுரம் - பாலை நிலம்.
1. திருக்குறள் - 978.
|