| 1257. | மின்னார் குடுமி நெடுவெற் பகங்கொங்கில் வீழ்பனிநோய் தன்னார் வழிகெட் டழிந்தமை சொல்லுவர் காணிறையே மன்னார் பரிசனத் தார்மேல் புகலு மெவர்க்குமிக்க நன்னா வலர்பெரு மானரு காசனி நல்கிடவே. | | 76 | | 1258. | நல்கென் றடியி னிணைபணி யார்;சண்பை நம்பெருமான் பல்கும் பெரும்புகழ் பாடகில் லார்சிலர் பாழ்க்கிறைத்திட்(டு) ஒல்கு முடம்பின ராய்,வழி தேடிட் டிடறிமுட்டிப் பில்கு மிடமறி யார்கெடு வாருறு பேய்த்தனமே. | | 77 |
வருவார் உரு - பிரிந்து சென்று மீண்டுவரும் தலைவர்களது உருவம். அவைகள் வரும் வழியிலே வைத்த விழியை உடையவர்கள் தலைவியர். விழியை அவ்வாறு வைத்த வண்ணமே உணவை அருந்துகின்ற திருவை (சிறப்பை) உடையவர்கள் தலைவியர். 'அவர்கள் இருந்த செழு நகரத்தில் கொண்டல்கள் மிண்டி மின்னிய' என்க. செவ்வித் திருவடி - பக்குவம் வந்த காலத்தில் உயிர்களால் அடையப்படும் திருவடி. அவை சிவபெருமானுடையன கொண்டல்கள் முன்னே சலத்தை (மழையை) வீச, அஃது இருண்டு பெய்தலின், 'வருகின்றவர்கள் வழியறியாது திகைப் பார்களோ' என்று வெருவா வண்ணம் பின்பு மின்னின' என்க. எனவே, 'மின்னலே விளக்காக வருவர்' என வற்புறுத்தியவாறு. இதன் முதல் அடியில் பாடங்கள் பிழைபட்டுள்ளன. மிண்டி - வலிமை யுற்று. 'தலைவர் பிரியத் 'தலைவியர் ஆற்றி யிருத்தல் உலகியல் ஆதலின், நீயும் அத்தன்மைய ளாதல் வேண்டும்' என்பாள், 'நம் தலைவர்' எனவும், 'நீ எனவும் கூறாது பொதுப்பட, "வருவார்" எனவும், "அருந்தும் திருவார்" எனவும் கூறினாள். 1257. குறிப்புரை: 'வீழ் பனிநோய் இறையே, மன் ஆர் பரிசனத்தோர் மேற் புகலும் அருகாசனி நல்கிட, வெற்பகக் கொங்கில் தன் ஆர்வழி கெட்டமை சொல்லுவர்' என இயைத்து முடிக்க. காண், முன்னிலை யசை. வெற்பகக் கொங்கு - மலைகள் நிறைந்த கொங்கு நாடு. பனி நோய் - குளிர்க் காய்ச்சல். தன் ஆர் வழி - தனக்கு ஏற்புடைய வழி "தன்" என்றது பனி நோயை. 'உலகத்தார் பலரும் சொல்லிப் புகழ்வர்' என்க. இறை - சிறிது. மன் ஆர் - மிகுதியாகப் பொருந்திய 'பதினாறாயிரம் பேர்' என்பர். பரிசனத்தோர், உடன் வரும் அடியார்கள். நல்கிட - அருள்புரிய அஃதாவது, 'திருப்பதிகம் அருளிச் செய்ய' என்பதாம். 1258. குறிப்புரை: "சிலர்" என எடுத்துக்கொண்டு, "சண்பை நாதன்" என்பதை "நல்கென்று" என்பதன்பின் கூட்டியுரைக்க. நல்கு - அருள் செய்; "அடியின் இணை" என்பதில் இன், வேண்டாவழிச் சாரியை. ஒல்குதல் - தளர்தல், வழி, வீடு பேற்றிற்கான வழி, பில்கும்
|