| 1259. | தனமே தருபுகழ்ச் சைவ சிகாமணி தன்னருள்போல் மனமே புகுந்த மடக்கொடி யே!மலர் மேலிருந்த அனமே! யமிர்தக் குமுதச்செவ் வாயுங்க ளாயமென்னும் இனமே பொலியவண் டாடெழிற் சோலையு ளெய்துகவே. | | 78 | | 1260. | உகட்டித்து மோட்டு வராலினம் மேதி முலையுரிஞ்ச அகட்டிற் சொரிபால் தடம்நிறை கொச்சை வயத்தரசைத் தகட்டில் திகழ்மணிப் பூண்தமி ழாகரன் தன்னையல்லால், பகட்டில் பொலியினும் வேண்டேன், ஒருவரைப் பாடுதலே. | | 79 |
இடம் - பேரின்பம் ததும்பும் இடம். அறியார்; முற்றெச்சம். உறு - மிகுதி. 'இஃது உறு பேய்த்தனம்' என்க. பேய்த்தனம் - பேய்த் தன்மை அஃதாவது, பித்து. 1259. குறிப்புரை: இப்பாட்டு, இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தலைவியை ஆய்த்து உய்த்தது. தனம் தரு புகழ் - பொருள் வழங்கியதனால் உண்டாகிய புகழ். அது தந்தையார் சிவபாத இருதயருக்கும், திருவீழி மிழலையில் பஞ்ச காலத்தில் பலர்க்கும் வழங்கியது. 'அன்னம்' என்பது இடைக்குறைந்து நின்றது. "செவ்வாய்" என்றதும் 'சிவந்த வாயை உடையவளே' - என்றவாறேயாம். பொலிய - (நீ இல்லாமையால் இழந்த) பொலிவைப் பெற்று விளங்கும்படி. இங்ஙனம் கூறியதனால், 'நீ செலவு தாழ்ப்பின் ஆயத்தார் தேடி வருவர்' என்பது குறிப்பித்தான். "சைவ சிகாமணிதன் அருள் போல் மனம் புகுந்த" - என்றதனால், 'அவ்வருள் போல நீ என் உயிரினும் சிறந்தாய் ஆதலின், நீ எங்கிருப்பினும் உனை நான் இமைப் போதளவின் மறவேன்' எனத் தனது காதற் சிறப்பு உணர்த்தினான். 1260. குறிப்புரை: "உகட்டித்து" என்னும் பிறவினை வினைச்சொல், 'உகண்டு' எனத் தன்வினையாய் நின்றது. உகளுதல் - பிறழ்தல், எழும்பிக் குதித்தல். மோட்டு வரால் இனம் - பெரிய வரால் மீனின் கூட்டம். மேதி - எருமை. உரிஞ்ச - உராய. அகடு - வயிறு அஃது ஆகுபெயராய், மடியைக் குறித்தது 'அகட்டினின்றும் சொரிபால் என்க. தடம் - தடாகம். கொச்சைவயம் சீகாழி. தகடு- பொன் தகடு. மணி - இரத்தினம். பூண் - அணிகலம். பகடு - யானை. ஒருவரை - வேறு ஒருவரை 'வேறு' என்பது தமிழாகரரோடு இயைபில்லாமை 'யானைமேற் செல்லும் செல்வத்தைப் பெறுவதாயினும்; தமிழாகரரோடு சிறிதும் இயைபில்லாத ஒருவரைப் பாடுதலை வேண்டேன்' என்பதாம்.
|