161. | கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி ஒழிந்த துடல்இரா வண்ணம் - அழிந்தது இராமலையா கொண்டுபோ என்னாமுன் நெஞ்சே சிராமலையான் பாதமே சேர். | | 17 |
162. | இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி விழவாடி ஆவி விடாமுன்னம் - மழபாடி ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை நீண்டானை நெஞ்சே நினை. | | 18 |
163. | உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள் கள்ளிடத்தான் வந்து கலவாமுன் - கொள்ளிடத்தின் தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும் தன்திருவாய்ப் பாடியான் தாள். | | 19 |
161. அ. சொ. பொ.: “உயிர் போயது நேற்றையது; அதனால் உடல், கட்டுக்களெல்லாம் தளர்ந்து நாற்றம் எடுத்து விட்டது. இனிச் சிறிது நேரமும் இருக்க முடியாதபடி அஃது அழிந்து விட்டது. ஆகவே, உறவினனான ஐயா, இனிச் சிறிது நேரமும் இருக்க முடியாதபடி அஃது அழிந்துவிட்டது. ஆகவே, உறவினனான ஐயா, இனிச் சிறிது நேரமும் இங்கு இராதபடி. அதனை அடக்கம் செய்ய வேண்டிய இடத்திற்குக் கொண்டு போ என்று அயலார் பலரும் சொல்லுவதற்குமுன், நெஞ்சே, திருச்சிராமலையில் உள்ள சிவன் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்று. ‘நன்னெற்று’ என்பது பாடம் அன்று. “கழிந்தது” என்பதற்கு, ‘உயிர், என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது. சிராமலை, திருச்சிராப்பள்ளிக் குன்று. 162. அ. சொ. பொ.: இழவு ஆடுதல் - இழவு கொண் டாடுதல். விழவு ஆடுதல் - விழாக் கொண்டாடுதல். விழா, பிண விழா. “ஆடி” என்பவற்றை ‘ஆட’ எனத் திரித்துக் கொள்க. “இழவாடி” என்பதனை, “விழாவாடி” என்பதற்கு முன்னே கூட்டுக. மழபாடி, சோழநாட்டுத் தலம். 163. அ. சொ. பொ.: உள்ளுதல் - நினைத்தல். அதனுடன் ‘இடு’ என்னும் அசையிடைச் சேர்ந்து, “உள்ளிட” என வந்தது. தான், அசை. உள்ளிட வல்லையே - நினைக்க வல்லாயோ. கள் இடம் - களவான காலம். அஃதாவது உயிர் சோர்வுற்றிருக் குங்காலம், “கள் இடத்தான்” என்னும் ஆன் உருபு ஏழாவதன் பொருளில் வந்தது. “காலத்தினாற் செய்த நன்றி”1 என்பதிற் போல. திருஆப்பாடி சோழ நாட்டுத் தலம்.
1. திருக்குறள் - 102.
|