164. | என்னெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன் கன்னஞ்செய் வாயாகிற் காலத்தால் - வன்னஞ்சேய் மாகம்பத் தானை உரித்தானை வண்கச்சி ஏகம்பத் தானை இறைஞ்சு. | | 20 |
165. | கரமூன்றிக் கண்ணிடுங்கிக் கால்குலைய மற்றோர் மரமூன்றி வாய்குதட்டா முன்னம் - புரம்மூன்றுந் தீச்சரத்தாற் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய ஈச்சரத்தான் பாதமே ஏத்து. | | 21 |
166. | தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்(டு) எஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் - நஞ்சங் கரந்துண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி இரந்துண் டிருக்கப் பெறின். | | 22 |
திருவாய்ப் பாடியான் - திருவாயால் பாடினவன். ‘தாள் உள்ளிட வல்லையே’ என மேலே கூட்டுக. ‘கலவா முன் உள்ளிட வல்லையே’ எனவும் இயைக்க. “வல்லையே” என்னும் வினா, ‘வல்லையாயின் நன்று’ என்னும் குறிப்பினது. 164. அ. சொ. பொ.: இரத்தல், குரையிரத்தல், உம்மை, இழிவு சிறப்பு. கன்னம் - செவி. அதனைச் செய்தலாவது, செயற்படச் செய்தல்; கேட்டல் ‘செவிசாய்த்தல்’ என்றலும் வழக்கு. “காலத்தால்” என்பதனை, மேல், “கள்ளிடத்தான்” என்றதனைக் கொண்டவாறு கொள்க. வல் நஞ்சு ஏய் - கொடிய நஞ்சு போன்ற. நஞ்சுய் ஆனை, மா ஆனை, கம்பத்து ஆனை’ எனத் தனித்தனி இயையும். மா - பெரிய. கம்பத்து - அசைதலையுடைய கச்சி. காஞ்சி. ஏகம்பம் அத்தலத்தில் உள்ள கோயில் 165. அ. சொ. பொ.: கரம் - கை. முதுமையில், எழும் பொழுது எழுந்திருக்க இயலாமல் கைகளை நிலத்தில் ஊன்றிக் கொண்டு எழுதலும், ஒளியை முற்ற வாங்க முடியாமல் கண் கூச இடுக்கிப் பார்ப்பதும், நடக்க முடியாமல் கால்கள் தள்ளாடுதலும், அவை தள்ளாடாமைப் பொருட்டுக் கோல், ஊன்றி நடத்தலும், பல் இல்லாமையால் வாயைக் குதட்டு தலும் இயற்கை. மரம், கோல். மற்று, வினைமாற்று, தீச்சரம் - தீக்கடவுளாகிய அம்பு. திருப்பனந்தாள், சோழ நாட்டுத்தலம், தாடகை யீச்சரம், அதில் உள்ள கோயிலின் பெயர். 166. அ. சொ. பொ.: ‘தஞ்சம்’ என்பது ஈற்று அம்முக் குறைந்து, ‘தஞ்சு’ என நின்றது. தஞ்சம் - எளிமை தலையளித்தல் - குடிகளை நன்கு காப்பாற்றுதல், எஞ்சாமை - அங்ஙனம் காப்பதில்
|