பக்கம் எண் :

89சேத்திரத் திருவெண்பா

167.

நூற்றனைத்தோர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ்
வீற்றிருந்த செல்வம் விழையாதே - கூற்றுதைத்தான்
ஆடரவங் கச்சா அரைக்கசைத்த அம்மான்தன்
பாடரவம் கேட்ட பகல்.

23

168.

உய்யும் மருந்திதனை உண்மின் எனவுற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் - மெல்ல
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.

24

திருச்சிற்றம்பலம்


இளையாமை. அத்தகைய பேற்றினைப் பெற்றாலும் அதனை வேண்டேன்’ என்க. ‘கரந்து உண்ட’ என்பதை ‘உண்டு கரந்த’ என முன்பின்னாக வைத்து விகுதி பிரித்துக் கூட்டி யுரைக்க. ஒற்றியூர் - தொண்டை நாட்டில் உள்ள கடற்கரைத் தலம். “ஓடு ஏந்தி இரந்து உண்டல்” என்பது துறவு வாழ்க்கையைக் குறித்தது.

167. அ. சொ. பொ.: நூற்று அனைத்து - நூற்றுக் கணக்கான. ஓர் நூற்றனைத்து’ என மாற்றி, ‘ஓர்’ என்பதனை நூற்றுக்கு அடையாக்குக. ‘பல் ஊழி வீற்றிருந்த’ என்க. நுண்வயிரம் - நுண்ணிய ஒளியையுடைய வயிரம் - “செல்வம்” என்பது, செல்வத்தோடு வாழ்ந்த காலம். பாடு அரவம் கேட்ட காலத்தை விழையாது’ என்க. விழையாது. ஒவ்வாது. ‘அரவம்’ இரண்டில் முன்னது பாம்பு; பின்னது ஓசை. ‘அம்மான் தன்னை’ என்னும் இரண்டாம் உருபு தொகுக்கப்பட்டது. இதில் தலம்யாதும் குறிக்கப்படவில்லை. அதனால். “கூற்று உதைத்தான்” என்ற குறிப்பினால், ‘திருக்கடவூர் கூறப்பட்டது’ எனலாம்.

168. அ. சொ. பொ.: உய்யும் மருந்து - இறவாமல் வாழ் வதற்கு ஏதுவான மருந்து. உற்றார் - சுற்றத்தார் கையைப் பிடித்துக் காட்ட வேண்டிய நிலை, கண் தெரியாமையால் வருவது. பைய எழுந்து - மெல்ல எழுந்து. “யான் வேண்டேன்” என்றல், உண்ண முடியாமையால். ‘திருமயானம்’ என்பது சில தலங்களில் உள்ள கோயில்களின் பெயராய் அமைந்துள்ளது. கச்சி மயானம், கடவூர் மயானம், நாலூர் மயானம் - இவை காண்க.

சத்திரத் திருவெண்பா முற்றிற்று

* * *