சேரமான் பெருமாள் நாயனார் அருளிச் செய்த 6. பொன்வண்ணத் தந்தாதி திருச்சிற்றம்பலம் 169. | பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் | | மேனி; பொலிந்திலங்கும் | | மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் | | வீழ்சடை; வெள்ளிக்குன்றம் |
169. இது, 'பொன் வண்ணம்' எனத்தொடங்கி, 'பொன் வண்ணம்' என முடியும்அந்தாதியாய் இருத்தலின் 'பொன்வண்ணத்தந்தாதி'எனப் பெயர் பெற்றது. ஒரு செய்யுளின் இறுதியைஅடுத்த செய்யுள் தனது முதலாகக் கொண்டு இயலும்செய்யுட்களால் ஆவது 'அந்தாதி' என்னும் பிரபந்தமாகும். அதனால் இது, 'சொற்றாடர்நிலை' என்னும்வகையைச் சேர்ந்த பிரபந்தமாம்.இவ்வாந்தாதியின் வரலாற் றைப் பெரியபுராணத்துட் காண்க.1 பொழிப்புரை: தன்னைக் கண்ட எனது மேனியின்நிறம் அங்ஙனம் கண்டபின் எந்த நிறமாயிற்றோஅந்த நிறத் தையே தனது இயற்கை நிறமாக உடையஇறைவனுக்கு மேனி, எப்பொழுதும் பொன்னின் நிறம்என்ன நிறமோ அந்த நிறமே. தாழ்ந்து தொங்குகின்றசடைகள், விட்டு விளங்குகின்ற மின்னல் என்னநிறமோ அந்த நிறமே. பெரிய இடப ஊர்தி, வெள்ளிமலை என்ன நிறம் வடிவோ அந்த நிறம் வடிவுகளே. குறிப்புரை : "தன்னைக் கண்ட" என்பதுமுதலாகத் தொடங்கி யுரைக்க. இச்செய்யுள்தில்லைக் கூத்தப் பெருமானைக் கண்டு அவர்மேல்காதல் கொண்டு ஆற்றாமை எய்தினாள் ஒருத்திகூற்றாகச் செய்யப்பட்டது. காதலால் வருந்தும்தலைவியரது மேனி பொன்னிறமாகிய பசலையை அடையும்என்பது, பசப்பித்துச் சென்றாரை உடையையோ? அன்ன நிறத்தையோ ? பீர மலர்2 என்பது முதலியவற்றான் விளங்கும். "தன்னைக்கண்ட என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகியஈசன்" என்பது
1. கழறிற்றறிவார் நாயனார் (சேரமான் பெருமாள் நாயனார்) 2. தொல் - சொல் - எச்சவியல், சேனாவரையம்.
|