| தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் | | மால்விடை; தன்னைக்கண்ட | | என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் | | ஆகிய ஈசனுக்கே. | | 1 |
170. | ஈசனைக் காணப் பலிகொடு செல்லஎற்றேஇவளோர் பேயனைக் காமுறு பிச்சிகொ லாமென்றுபேதையர்முன் தாயெனை ஈர்ப்பத் தமியேன் தளர,அத்தாழ்சடையோன் வாவெனப் புல்லவென்றான்இமை விண்டனவாட்கண்களே. | | 2 |
இவ்வாறு வெளிப் பொருள் தருவதாயினும்,'காணப்படாத இறைவனது இயல்பு. காணப்படுகின்ற அவன்அடியவரிடத்து விளங்குதல் பற்றியே அறியப்படும்'என்பதே இதன் உட்பொருள். | ஒன்றும் குறியே குறிஆத லால்அதனுக்கு ஒன்றும் குறிஒன் றிலாமையினால் - ஒன்றோடு உவமிக்க லாவதுவுந் தான்இல்லை; ஒவ்வாத் தவம்மிக்கா ரேஇதற்குச் சான்று.1 |
என்ற திருக்களிற்றுப்படியினைக் காண்க. மால்,மாயோனுமாம். 170.பொழிப்புரை: ("பிச்சை" என்றுகேட்டு வாயிலில் வந்தவன் சிவபிரான் - என்றுதெரிந்துயான்) 'அவனைக் காண வேண்டும்' என்னும்ஆசையால் பிச்சையைப் பிறர் எடுத்துச் செய்வதற்குமுன் யானே விரைந்து எடுத்துச் செல்ல, என் தாய்(செவிலி) 'புறம் செல்லலாகாத இவள் மிக விரைந்துபுறம் செல்கின்றாள் ஆதலின் பிச்சைக்கு வந்தஇந்தப் பேய்க் கூட்டத்தான் மேல், பித்துப்பிடித்தவள் போல் இவள் காதல் கொண்டாள்போலும்' என்று அறிந்து, தோழியர் பலர்முன் தாய்என்னை, 'ஏடி, உள்ளே வா' என்று பற்றி ஈர்க்க, எனக்குஉதவுவார்யாரும் இன்றி யான் சோர்தலைக் கண்டு,பிச்சைக்கு வந்த, நீண்ட சடையை யுடைய அவன், 'நீஎன்னைக் காதலித்து விட்டபின் எவர் உன்னைத்தடுத்து என்ன பயன். (நீ என்னைக் காதலித்துவிட்டபொழுதே நீ எனக்கு உரியவளாய் விட்டாய்; ஆகவே.)நீ யாவரும் அறியவே என்னைத் தழுவ வா' என்றுஅழைத்தான்.அவனது பொருளை அறிய, என்னுடைய வாள்போன்ற கண்கள் பொழிந்த அன்பு நீரைத் தடுக்கமாட்டாமல் இமைகள் திறந்துவிட்டன. குறிப்புரை: "கண்டார் காதலிக்கும்கணநாதன் எம் காளத்தியாய்"2 என்று அருளிச்செய்தபடி, "பக்குவான்மாக்கள்
1. வெண்பா - 10 2. திருமுறை - 7.26.1
|