பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை870

1264.வருந்துங் கொலாங்கழல், மண்மிசை யேகிடில் என்றுமென்றார்த்
திருந்தும் புகழ்ச்சண்பை ஞானசம் பந்தற்குச் சீர்மணிகள்
பொருந்துஞ் சிவிகை கொடுத்தனன் காண்;புண ரித்திகழ்நஞ்(சு)
அருந்தும் பிரான்நம் மரத்துறை மேய வரும்பொருளே.

83

1265.பொருளென வென்னைத்தன் பொற்கழல் காட்டிப் புகுந்தெனக்கிங்(கு)
அருளிய சீர்த்திரு ஞானசம் பந்த னருளிலர்போல்
வெருளின மானின்மென் நோக்கியை விட்டு விழுநிதியின்
திரளினை யாதரித் தால்நன்று சாலவென் சிந்தனைக்கே.

84

1266.சிந்தையைத் தேனைத் திருவா வடுதுறை யுள்திகழும்
எந்தையைப் பாட லிசைத்துத் தொலையா நிதியமெய்தித்
 

தட்டுதல்; தாளம் இடுதல், பாணி - கை. எண் ஆர் - எண்ணுதல் (கணித்தல்) பொருந்திய எழுத்து அஞ்சு திருவைந் தெழுத்து மந்திரம். இட்ட - பொறிக்கப்பட்ட. மண்ணார் - மண்ணுலகத்தில் உள்ளவர். 'அச்சண்பை நாதனை' எனச் சுட்டு வருவிக்க. எண்ணார், முற்றெச்சம் 'எண்ணாராய் வருந்துவது என்' என ஒருசொல் வருவித்து முடிக்க.

1264. குறிப்புரை: இதன் பொருள் வெளிப்படை.

மென்தார் - மெல்லிய மலர் மாலையை அணிந்த. மணி, முத்து. காண், அசை. புணரி - கடல். 'அரும் பொருளாய் உள்ளவன்' என்க.

1265. குறிப்புரை: இப்பாட்டு, பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன், பின் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.

'என்னைப் பொருளெனக் கொண்டு' என ஒரு சொல் வருவிக்க. ஞானசம்பந்தன் அருள் இல்லாதவரே அருளைத் துறந்து, பொருளை விரும்புவர்' என்பதாம். ஆதரித்தால் - விரும்பினால், 'அது நன்று' எனத் தோன்றா எழுவாய் வருவிக்க. தீதாவதனை, "நன்று" என்றது இகழ்ச்சிக் குறிப்பு. 'யாம் பிரியின் தலைவி வாழாள்' என்பதை அறிந்து வைத்தும் பொருள் வலிக்கின்ற நெஞ்சம் பேதைமை யுடைத்து - என்றபடி.

1266. குறிப்புரை: முன்பு 'சிந்தையை' என்றதனால் பின்பு "தேனை" என்றதற்கு, 'சிந்தையில் ஊறும் தேனை' - என உரைக்க. தொலையா நிதியம் - உலவாக் கிழி. தீத் தொழில் மூட்டிய -