| தந்தையைத் தீத்தொழில் மூட்டிய கோன்சரண் சார்விலரேல் நிந்தையைப் பெற்(று)ஒழி யாதிரந் தேகரம் நீட்டுவரே. | | 85 | | 1267. | நீட்டுவ ரோதத்தொ டேறிய சங்கம் நெகுமுளரித் தோட்டுவெண் முத்தம் சொரிசண்பை நாதன் தொழாதவரின் வேட்டுவர் வேட்டதண் ணீரினுக்(கு) உண்ணீ ருணக்குழித்த காட்டுவ ரூறல் பருகும் கொலாமெம் கனங்குழையே. | | 86 | | 1268. | குழைக்கின்ற கொன்றைபொன் போல மலர,நுங் கூட்டமெல்லாம் அழைக்கின்ற கொண்ட லியம்புஒன் றிலையகன் றார்வரவு |
வேள்வித் தொழிலில் ஈடுபடச் செய்த. "சார்வலி ரேல்", என்பது முதலாக வந்த பயனிலைகட்கு, 'மக்கள்' என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க. 1267. குறிப்புரை: இப்பாட்டு, தலைவனுக்கு குறை நேர்ந்த தோழி தலைவியைக் குறை நயப்பிக்கச் சில கூறி காலத்தில் தலைவி அதனை அறியாள் போன்று குறியாள் கூறியது, அஃதாவது கூறப்பட்ட பொருளோடு தொடர்புபடாமல் பொதுவாக எதனையோ கூறியது. இதனை, என் செய்வாம் - எனில், 'பொன் செய்வாம்' - என்றல் போல்வது" என்பர். "எம் கனங் குழையே" என்பதை முதலிற் கொண்டு, இறுதியில், 'பருகும் ஆம் கொல்' - என மாற்றி முடிக்க. நீட்டு உவர் ஓதத்தொடு - கரைமேல் நீட்டுகின்ற, உப்புச் சுவையை உடைய அலைகளோடு. முளரித் தோட்டு - தாமரை மலரின் இதழ்களின்மேல். இது நெய்தலில் மருதம் மயங்கிய திணை மயக்கம். வேட்ட தண்ணீர் - நீர் வேட்கையால் அதனைத் தணிக்க விரும்பிய நல்ல நீருக்கு ஈடு. காட்டு உவர் ஊறல் பருகும் ஆம் கொல் - காட்டில் உள்ள உவர்க் கேணியில் ஊறுகின்ற அந்த நீரும் பருகுநீர் ஆகின்றது போலும்! இது வேடர் வாழ்க்கையின் தாழ்வினைப் புலப்படுத்தியது. தோழி கருதிய பொருட்கும், இதற்கும் யாதோர் இயைபும் இல்லை. தலைவி இவ்வாறு தொடர்பில்லாமல் கூறியது, தோழி கருத்தைத் தான் அறிந்து கொள்ளாதது போலக் காட்டிக் கொள்ளுதற்காம், "தொழாதவரின்" என்றாரேனும் 'தொழா தவர்க்கு ஆவது போல' என்பதே கருத்து. 'சண்பை நாதனைத் தொழாதவரே இடர்ப்பாடான வாழ்க்கையை உடையவர் ஆவர்' என்பதாம். "பருகு" என்னும் முதனிலைத் தொழிற் பெயர் ஆகுபெயராய், பருகப்படும் நீரைக் குறித்தது.
|