பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை872

பிழைக்கின் றதுகொலென் றஞ்சியொண் சண்பைப் பிரான்புறவத்(து)
இழைக்கின்ற கூடல் முடியஎண் ணாத இளங்கொடிக்கே.

87

1269.கொடித்தே ரவுணர் குழாமன லூட்டிய குன்றவில்லி
அடித்தேர் கருத்தி னருகா சனியை யணியிழையார்
முடித்தேர் கமலம் கவர்வான், முரிபுரு வச்சிலையால்
வடித்தேர் நயனக் கணையிணை கோத்து வளைத்தனரே.

88

 

1268. குறிப்புரை: இப்பாட்டு, தலைவன் நீடத் தலைவியது ஆற்றாமை கண்டு தலைவி முன்னிலைப் புறமொழிகளால் ஆற்றுவித்தது.

கொண்டல் - மேகமே! இது மேகத்தைத் தோழி விளித்தது. ஒன்று இலை - வேறு ஒன்றும் செய்தி யில்லை. 'கொண்டலே, இழைக்கின்ற கூடல் முடிய எண்ணாத இளங் கொடிக்கு, அகன்றார் வரவு இயம்பு; வேறு ஒன்றும் செய்தி யில்லை' எனக் கூட்டி முடிக்க. கூடல் இழைத்தலாவது, கண்ணை மூடிக்கொண்டு மணலில் ஒரு வட்டம் வரைதல். 'அவ்வட்டத்தின் இரு முனைகளும் ஒன்றாய்க் கூட, வட்டம் முழுமை பெற்று நிற்குமாயின் கருதிய பொருள் கைகூடும்' எனவும், 'முனைகள் கூடாமல் வேறாய்ப் போய்விடின் கருதிய பொருள் கைகூடாது' எனவும் கொள்ளுதல் வழக்கம். பிரிந்து சென்ற தலைவர் வந்து சேர்தலை அறியத் தலைவியர் இவ்வாறு கூடல்களை இழைத்துப் பார்ப்பார்கள் இருமுனையும் ஒன்று கூடுதலால் இதற்குக் 'கூடல்' என்பது பெயராயிற்று. அது தலைவர் வந்து தலைவியரோடு கூடுதலையும் குறிப்பதாம். "கூடல் முடிய எண்ணாத இளங்கொடி" என்றதனால், இங்குத் தலைவி பல முறை கூடல் இழைத்து அது கூடாமை கண்டு ஆற்றாமையுடைய ளாயினாளாம். 'கொண்டலே! அகன்றார் வரவை நீ இளங் கொடிக்கு இயம்பு' - என்றது, 'கார் காலம் வந்தமையால் இனித் தாழ்ந்து தலைவர் வருவார்' என்பதை முன்னிலைப் புறமொழியாகக் கூறி ஆற்றுவித்தது. குழைக்கின்ற - தளிர்க்கின்ற. புறவம் - முல்லை நிலம்.

1269. குறிப்புரை: இப்பாட்டு, ஞானசம்பந்தரது உலாப் புறத்தில் கண்டோர் கூறிய தாக அமைந்தது.

"அடித் தேர்" என்பதில் தகர ஒற்று, எதுகை நோக்கி விரிக்கப்பட்டது. தேர்தல் - சிந்தித்தல். 'முடித்த' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ஏர் - அழகு. கமலம், தாமரை மலர்க் கண்ணி; ஆகுபெயர், வடித்து - கூர்மை யாக்கப்பட்டு. ஏர் - எழுச்சி பெற்ற. வளைத்தனர் - முற்றுகை யிட்டனர்.