| 1273. | பணிபடு நுண்ணிடை பாதம் பொறாபல காதமென்று தணிபடு மின்சொற்க ளால்தவிர்த் தேற்குத் தழலுமிழ்கான் மணிபடு பொற்கழல் ஞானசம் பந்தன் மருவலர்போல் துணிபடு வேலன்ன கண்ணியென் னோவந்து தோன்றியதே. | | 92 | | 1274. | தோன்றல்தன் னோடுட னேகிய சுந்தரப் பூண்முலையை ஈன்றவ ரேயிந்த வேந்திழை யார் இவ்வளவில் வான்றவர் சூழுந் தமிழா கரன்தன் வடவரையே போன்றபொன் மாடக் கழுமல நாடு பொருந்துவரே. | | 93 | | 1275. | பொருந்திய ஞானத் தமிழா கரன்பதி, பொற்புரிசை திருந்திய தோணி புரத்துக் கிறைவன் திருவருளால் கருந்தடம் நீரெழு காலையிற் காகூ கழுமலமென்(று) இருந்திட வாமென்று வானவ ராகி யியங்கியதே. | | 94 |
1273. குறிப்புரை: இப்பாட்டு, தலைவன் போக்குடன்படானாகவும் அதனைத் துணிந்து வந்த தலைவியைக் கண்டு அவன் தன் நெஞ்சினுள்ளே சொல்லியது. பனிபடும் இடை - பாம்பு போலும் இடை. இஃது அதனை உடையாளைக் குறித்தது. 'இடையது பாதம்' என்க. 'பல காதம் நடக்கப் பொறா' என ஒருசொல் வருவிக்க. தணி படும் இன்சொல் - பணிவு பொருந்திய இன்சொல். "தவிர்த் தேற்கு" என்னும் நான்காவதை, 'தவிந்தேன்கண்' என ஏழாவ தாகத் திரிக்க. 'தவிர்த்தேன்கண், வேலன்ன கண்ணி, ஞான சம்பந்தன் மருவலர்போல், தழல் உமிழ் கான் வந்து தோன்றியது என்னோ' என்க. துணிபடு எதிர்த்தார் உடலம் துண்டு படுதற்கு ஏது வாயவேல். தலைவனது உடன்பாட்டைத் தலைவி பெறுதலும், தலைவன் சிறிது ஆற்றுதலும் இதன் பயன். 1274. குறிப்புரை: இப்பாட்டு, தலைவி தலைவன் உடன் போக்கில் பின் தேடிச் சென்ற செவிலியைக் கலந்துடன் வருவோர் கண்டு தேற்றியது. "ஈன்றவரே" என்றது செவிலியை. 'இந்த ஏந்திழையார் பூண் முலையை ஈன்றவரே' - என்க. செவிலியை 'இன்னார்' என்று துணிந்தபின் பின்வருமாறு அவட்குக் கூறினர் அவர் - இவர் தேடிச் செல்கின்ற அந்த இருவர். வடவரை - மேருமலை, "அவர் 'இவ்வளவில் கழுமல நாடு பொருந்துவர்' என்றதனால் இனி நீவிர் மேற் செல்ல வேண்டா, மீள்வதே தக்கது' என்பது குறிப்பெச்சம். 1275. குறிப்புரை: 'தமிழாகரன் பதி எங்கும் வானவராகி இயங்கியது தோணிபுரத்துக்கு இறைவன் திருவருளால் காலையில், -
|