பக்கம் எண் :

875ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

1276.இயலா தனபல சிந்தைய ராயிய லுங்கொலென்று
முயலா தனவே முயன்றுவன் மோகச் சுழியழுந்திச்
செயலார் வரைமதிற் காழியர் கோன்திரு நாமங்களுக்(கு)
அயலா ரெனப்பல காலங்கள் போக்குவ ராதர்களே.

95

1277.ஆதர வும்,பயப் பும்மிவ ளெய்தின னென்றயலார்
மாத ரவஞ்சொல்லி யென்னை நகுவது! மாமறையின்
ஓதர வம்பொலி காழித் தமிழா கரனொடன்றே
தீதர வம்பட வன்னையென் னோபல செப்புவதே.

96

1278.செப்பிய வென்ன தவம்முயன் றேன்நல்ல செந்தமிழால்
ஒப்புடை மாலைத் தமிழா கரனை, யுணர்வுடையோர்
கற்புடை வாய்மொழி யேத்தும் படி,கத றிட்டிவர
மற்படு தொல்லைக் கடல்புடை சூழ்தரு மண்ணிடையே.

97



கா கூகழுமலம் - என்று' இருந்திடவாம்' என முடிக்க. ஈற்றடியிலும் 'என்று' என ஓதுதல் பாடம் அன்று. "தோணிபுரத்துக்கு இறைவன்" என்றதும் ஞானசம்பந்தரை, 'சீகாழியில் தங்குவதால் காலையில் அவரது பாடலை மற்றவர்களோடு நாமும் ஓதிப் பயன் பெறலாம்' என்னும் கருதினால் தான். சீகாழியில் தேவர்கள் குழுமுகிறார்கள் என்றபடி "கா கூ' என்றது திருந்திய இசை இல்லாமையை. காலையில் நீர்ப் பறவைகள் எழுந்து ஒலிப்பதை நீரே துயில் எழுவது போலக் கூறுதல் வழக்கம்.

1276. குறிப்புரை: இயலாதன - கைகூடாதன. 'அன்ன பலவற்றைச் சிந்தையில் உடையவராய்' என்க. முயலாதன - முயலத் தகாதன. செயல் ஆர் - வேலைப்பாடு அமைந்த. வரை மதில் - மலைபோலும் மதில். ஆதர்கள் - அறிவிலிகள்.

1277. குறிப்புரை: இப்பாட்டு, கைக்கிளைத் தலைவியது ஆற்றாமையைச் செவிலியறிந்தமையை அறியாது அலர் அஞ்சிய அவளுக்குத் தோழி கூறியது.

ஆதரவு - காதல். பயப்பு - பசலை. மா தரவு - பெரிய குற்றம். தாவு, 'தரவம்' என வந்தது. பின் இரண்டடிகளில் உள்ள அரவம் - ஒலி, அன்னை என்னோ பல செப்புவது தமிழாகர னொடு தீது அரவம் பட அன்றே' என முடிக்க. தீது அரவம் - குற்றமாகிய சொல், அது, 'தலைவி காதல் வயப்பட்டாள்' என்பது. என்னோ - எவைஎவையோ.

1278. குறிப்புரை: 'தமிழாகரனை, உணர்வுடையோர் ஏத்தும்படி நல்ல செந்தமிழால் செப்பிய மண்ணிடை என்ன தவம் முயன்றேன்' என இயைத்து முடிக்க. செப்பிய - செப்பு தற்கு. ஒப்புடை மாலை