பக்கம் எண் :

877ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

தனி வெண்பா

1282.பாரகலத் துன்பங் கடந்தமர ரால்பணியும்
ஏரகலம் பெற்றாலு மின்னாதால் - காரகிலின்
தூமங் கமழ்மாடத் தோணி புரத்தலைவன்
நாமஞ் செவிக்கிசையா நாள்.

101

திருச்சிற்றம்பலம்


1282. குறிப்புரை: 'தோணிபுரத் தலைவன் நாமம் செவிக்கு இசையா நாள், பாருலகத்தைக் கடந்து அமரர்களால் வணங்கப்படும் நாளாய் இருப்பினும் இன்னாது' என்க.

ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி முற்றிற்று.