நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்த 35. ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் திருச்சிற்றம்பலம் 1283. | பாலித் தெழில்தங்குபாரகம் உய்யப் பறிதலையோர் மாலுற் றழுந்த அவதரித் தோன்மணி நீர்க்கமலத் தாலித் தலர்மிசை யன்னம் நடப்ப, வணங்கிதென்னாச் சாலித் தலைபணி சண்பையர் காவலன் சம்பந்தனே. | | 1 | 1284. | கொங்குதங் குங்குஞ்சி கூடாப் பருவத்துக் குன்றவில்லி பங்குதங் கும்மங்கை தன்னருள் பெற்றவன், பைம்புணரிப் பொங்குவங் கப்புனல் சேர் த புதுமணப் புன்னையின்கீழ்ச் சங்குதங் கும்வயற் சண்பையர் காவலன் சம்பந்தனே. | | 2 | 1285. | குவளைக் கருங்கண் கொடியிடை துன்பந் தவிரவன்று துவளத் தொடுவிடந் தீர்த்த தமிழின் தொகைசெய்தவன் |
1283. ஆளுடைய பிள்ளையார்மீது நூறு கட்டளைக் கலித்துறைகளை அந்தாதியாக அருளிச் செய்த நம்பிகள், பின்னும் அவ்வாறான பத்துப் பாடல்களை, 'திருச்சண்பையர் விருத்தம்' என அருளிச் செய்கின்றார். 'சண்பை சீகாழி' என்பது மேற் பல இடங்களிலும் விளங்கி நின்றது. குறிப்புரை: 'சண்பையர் காவலன் சம்பந்தன், பார் முகம் உய்ய (அருள்) பாலித்து, பறி தலையோர் மால் உற்று அழுந்த வெல்ல அவதரித்தோன்' என முடிக்க. 'வெல்ல' என்பது சொல்லெச்சமாய் வந்து இயையும். பறி தலை - மயிர் பறிக்கப் பட்ட தலை. அ மணி நீர் - நீல மணிபோலும் நீர், ஆலித்து - அசைந்து. அலர் - தாமரை மலர். அணங்கு - தெய்வம்; நாமங்கள், சாலி - நெற்பயிர். அது தலை வணங்குதற்கு இவ்வாறு காரணம் கற்பித்தது, தற்குறிப்பேற்ற அணி. 1284. குறிப்புரை: 'சம்பந்தன் குஞ்சி கூடாப் பருவத்துக் குன்ற வில்லி பங்கு தங்கும் மங்கைதன் அருள் பெற்றவன்' எனக் கூட்டி முடிக்க. கொங்கு - வாசனை. குஞ்சி கூடாப் பருவம் - தலை மயிர் கூட்டி முடிக்க வாராத பருவம்; குழவிப் பருவம். அருள் - ஞானப் பால். புணரி - கடல். வங்கம் - மரக்கலம். வயல் - உப்பளம். 1285. குறிப்புரை: குவளைக் கருங்கண் கொடியிடை யாவாள் ஒரு வணிகப் பெண். 'கொடி இடை துவள' எனக் கூட்டுக. திவளுதல்
|