பக்கம் எண் :

879ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்

திவளக் கொடிக்குன்ற மாளிகைச் சூளிகைச் சென்னியின்வாய்த்
தவளப் பிறைதங்கு சண்பையர் காவலன் சம்பந்தனே.

3

1286.கள்ளம் பொழில்நனி பள்ளித் தடங்கட மாக்கியஃதே
வெள்ளம் பணிநெய்த லாக்கிய வித்தகன், வெண்குருகு
புள்ளொண் தவளப் புரிசங்கொ டாலக் கயலுகளத்
தள்ளந் தடம்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே.

4

1287.ஆறதே றுஞ்சடை யானருள் மேவ வவனியர்க்கு
வீறதே றுந்தமி ழால்வழி கண்டவன், மென்கிளிமாந்
தேறல்கோ தித்துறு சண்பகந் தாவிச் செழுங்கமுகின்
தாறதே றும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே.

5

1288.அந்தமுந் தும்பிற வித்துயர் தீர வரனடிக்கே
பந்தமுந் துந்தமிழ் செய்த பராபரன் பைந்தடத்தேன்
வந்துமுந் தும்நந்தம் முத்தங் கொடுப்ப வயற்கயலே
சந்தமுந் தும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே.

6

 

- சுண்ணத்தின் ஒளி விளங்குதல். 'திவள் அம் மாளிகை' என்க. குளிகை - மேல் மாடத்தின் முகப்பு. 'சம்பந்தன், கொடியிடை துவள, அத்துன்பம் தவிர அன்று விடம் தீர்த்த தமிழின் தொகை செய்தவன்' என இயைத்து முடிக்க.

1286. குறிப்புரை: 'சம்பந்தன் நனிபள்ளித் தடம் கடம் ஆக்கி, அஃதே நெய்தல் ஆக்கிய வித்தகன்' எனக் கூட்டி முடிக்க. கள் - தேன். நனிபள்ளி, ஒரு தலம். தடம் - வழி. கடம் - பாலை நிலம். வெள்ளம் பணி - மிகுந்த நீர் எங்கும் மலிகின்ற. வித்தகன் - சதுரப்பாடு உடையவன். "வெண்குருகு புள்" என்பது இருபெயர் ஒட்டு. ஆல ஒலிக்க. தள் - தட்டல்; தடுத்தல். "தட்டோர் அம்ம இவண் தட்டோரே - தள்ளா தோர் இவண் தள்ளா தோரே" என்னும் புறப்பாட்டைக் காண்க.1

1287. குறிப்புரை: 'சம்பந்தன் அவனியர்க்குச் சடையான் அருள் மேவத் தமிழால் வழி கண்டவன்' என முடிக்க. "ஆறது" "வீறது" "தாறது" என்பவற்றில் அது பகுதிப் பொருள் விகுதி. வீறு - பெருமை. தேறல் - தேன். என்றது தேன்போலும் சுவையை உடைய தளிர்களை. துறு - நெருங்கிய. தாறு - குலை 'கிளி கோதி, தாவி ஏறும் பொழில்' என்க.

1288. குறிப்புரை: 'சம்பந்தன் (ஓதுபவர்களைப்) பிறவித் துயர் தீர அரன் அடிக்கே உந்தும் தமிழ் செய்த பராபரன்' எனக் கூட்டி


1. புறநானூறு - 18.