பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை880

1289.புண்டலைக் குஞ்சரப் போர்வையர் கோயிற் புதவடைக்கும்
ஒண்டலைத் தண்டமிழ்க் குண்டா சனியும்பர் பம்பிமின்னுங்
கொண்டலைக் கண்டுவண் டாடப் பெடையொடுங் கொக்குறங்குந்
தண்டலைக் குண்டகழ்ச் சண்பையர் காவலன் சம்பந்தனே.

7

1290.எண்டலைக் குந்தலை வன்கழல் சூடியெ னுள்ளம்வெள்ளங்
கண்டலைப் பத்தன் கழல்தந்த வன்கதிர் முத்தநத்தம்
விண்டலைப் பத்தியி லோடும் விரவி மிளிர்பவளம்
தண்டலைக் குங்கடற் சண்பையர் காவலன் சம்பந்தனே.

8

 

முடிக்க. அந்தம் முந்தும் பிறவி - இறப்பை முன்னிட்டுக் கொண்டு வரும் பிறப்பு. பந்தம் - சம்பந்தம்; தொடர்பு - 'தொடர்பு உண்டாக உந்தும்' என ஆக்கம் வருவிக்க. 'பராற் பரன்' என்பது 'பராபரன்' என மருவிற்று. 'மேலானவர்க் கெல்லாம் மேலானவன்' என்பது பொருள். தடம் - பொய்கை. தேன் - வண்டு. நந்தம் முந்தி முத்தம் கொடுப்ப - சங்குகள் முற்பட்டு முத்துக்களைக் கொடுக்க. "முத்தம் கொடுப்ப" என்பது சிலேடை. "கொடுப்ப" என்பதன் பின் 'மீண்டு' என ஒரு சொல் வருவிக்க. சந்தம் உந்தும் - இசை பாடுகின்ற முத்தத்தைப் பெறுதல் வண்டிற்கு இல்லையாயினும் உள்ளதுபோலத் தற்குறிப்பேற்றம்.

1289. குறிப்புரை: 'சம்பந்தன் குஞ்சரப் போர்வையர் கோயில் புதவு அடைக்கும் தமிழைப் பாடிய குண்டாசனி' என வினைமுடிக்க. புண் - பாகன் குத்தியதனால் உண்டான புண். "குஞ்சரம்" என்பது ஆகுபெயராய், அதன் தோலைக் குறித்தது. புதவு - வாயில். உம்பர்ப் பம்பி - வானத்தில் நெருங்கி. தண்டலை - சோலை. குண்டு - ஆழம்.

1290. குறிப்புரை: 'சம்பந்தன், என் உள்ளம் எண் தலைக்கும் தலைவன் கழல் சூடி வெள்ளம் கண்டு அலைப்பத் தன் கழல் தந்தவன்' எனக் கூட்டி முடிக்க. எண் தலை - எட்டுத் திசை. "வெள்ளம்" என்பதனை, 'இன்ப வெள்ளம்' என்க. அலைப்ப - அலைத்து முழுகும் படி. "கடல் அலைத்தே ஆடுதற்குக் கைவந்து நின்றும்"1 என்றது காண்க. 'சம்பந்தன் முன்னர்த் தன்கழலைத் தந்தமையால் பின்பு என் உள்ளம் சிவன் கழலைக் காணலாயிற்று' என்பதாம். 'முத்தம் நத்தம் விண்ட அலைப் பத்தியில் பவளம் விரவித் தண்டலைக்கும் ஓடும் கடல்' - என்க. நத்தம் - சங்கு. "விண்டு" என்பதை 'விள்ள' எனத் திரிக்க. விள்ளல் - ஈனுதல். தண்டலை - கடற் கரைச் சோலை. "தண்டலைக்கு" என்னும் நான்காவதை,


1. திருக்களிற்றுப்படியார் - 90.