1291. | ஆறுமண் டப்பண்டு செஞ்சொல் நடாத்தி யமண்முழுதும் பாறுமண் டக்கண்ட சைவ சிகாமணி பைந்தடத்த சேறுமண் டச்சங்கு செங்கயல் தேமாங் கனிசிதறிச் சாறுமண் டும்வயல் சண்பையர் காவலன் சம்பந்தனே. | | 9 | 1292. | விடந்திளைக் கும்அர வல்குல்மென் கூந்தல் பெருமணத்தின் வடந்திளைக் குங்கொங்கை புல்கிய மன்மதன் வண்கதலிக் கடந்திளைத் துக்கழு நீர்புல்கி யொல்கிக் கரும்புரிஞ்சித் தடந்திளைக் கும்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே. | | 10 | 1293. | பாலித்த கொங்கு குவளைகள் ளம்பொழில் கீழ்ப்பரந்து வாலிப்ப வாறதே றுங்கழ னிச்சண்பை யந்தமுந்து |
'தண்டலைக்கண்' என ஏழாவதாகத் திரிக்க. உம்மை, இறந்தது தழுவிய எச்சம். 1291. குறிப்புரை: 'சம்பந்தன், பண்டு ஆறு மண்டச் செஞ்சொல் நடாத்தி.... சைவ சிகாமணி' எனக் கூட்டி முடிக்க. ஆறு - வையை நதி; அஃது அதன் நீரைக் குறித்தது. மண்ட - பொருந்த. "செஞ் சொல்" என்றது செவ்விய சொற்களை எழுதிய ஏட்டைக் குறித்தது. நடாத்தியது எதிர்முகமாக. பாறு மண்ட; - பருந்துகள் நெருங்கி உண்ண. 'சங்கு தடத்த சேறு மண்ட, கயல் கனியைச் சிதறி அதன் சாறு மண்டும் வயல்' என்க. தடம் - பொய்கை. மண்டுதல் - நெருங்குதல். 1292. குறிப்புரை: 'சம்பந்தன் பெருமணத்தில் இருந்த அழகு மிக்க ஒருத்தி உள்ளத்தால் ஆரத் தழுவிய மன்மதன் போலும் அழகினை உடையவன்' இப்பாட்டின் தெளிந்த பொருள். இதனால் பிள்ளையாரது திருமேனி அழகைப் புகழ்ந்தவாறு, "பெருமணம்" என்பதை முதலிற் கொள்க. பெருமணம் - நல்லூர்ப் பெருமணம்; தலம். "பெருமணத்தின் கொங்கை" என்பதை, 'பறம்பிற் பாரி' என்பது போலக் கொள்க. 'அல்குலையும், கூந்தலையும் உடைய கொங்கை' என்க. கொங்கை சினையாகு பெயர். வடம் - மணி வடம், கடம் - காடு, புதரை, 'காடு' என்றார். கழுநீர் - குவளை. ஒல்குதல் - அசைதல். தடம் - பொய்கை. திளைத்தல், இங்கே நிரம்பி நிற்றல். வருவித்துரைத்தன ஆற்றலாற் கொண்டவை. 1293. குறிப்புரை: அந்தாதியிற் போல இவ்விருத்தத்திலும் ஒரு பாடலை அகத்துறைப் பாலதாக அருளிச் செய்தார். இது கைக்கிளைத் தலைவியது வேறுபாடு கண்டு வினாவிய செவிலிக்குத் தோழி உண்மை வகையால் அறத்தொடு நின்றது.
|