| மேலிட்ட புண்டலைக் குஞ்சரத் எண்டலைக் குந்தலைவன் கோலிட்ட வாறு விடந்திளைக் கும்அர வல்குலையே. | | 11 |
திருச்சிற்றம்பலம்
பாலித்த - 'ஒழுக விடப்பட்ட கள்' என்க. கொங்கு நறுமணம். ஆலிப்ப - ஓட. 'குவளைத் தேன் பரந்து ஓடும்படி ஆற்று நீர் மிக்கெழுகின்ற கழனி' என்க. அந்தம் - திசைகளின் முடிவு. குஞ்சரம் - திசை யானை. திசையானை களையுடைய, எண் தலை - எட்டுத் திக்கு. 'அவை அனைத்திற்கும் தலைவன் சண்பையில் தலைவன்' என்க. இவ் விடம் திளைக்கும் அரவு அல்குல்' எனச் சுட்டு வருவிக்க. 'இவளை சண்பையில் தலைவன் கோல் இட்ட ஆறே இவள் வேறுபாடு' என்றபடி. கோல் - ஆணை; 'தழுவி வாழப் பெறாது. தனிமை யால் மெலிக' என்பதே அவ் ஆணையாம். ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் முற்றிற்று.
|