பக்கம் எண் :

883ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை

நம்பியாண்டார் நம்பிகள்
அருளிச் செய்த

36. ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை

அகவற்பா
திருச்சிற்றம்பலம்

1294.திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்குங்
கங்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின்
இதழியின் செம்பொ னிருகரை சிதறிப்
புதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன்
5.திருவருள் பெற்ற இருபிறப் பாளன்

முத்தீ வேள்வி நான்மறை வளர
ஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன்
ஏழிசை யாழை யெண்டிசை யறியத்
துண்டப் படுத்த தண்டமிழ் விரகன்
10.காழி நாடன் கவுணியர் தலைவன்

மாழை நோக்கி மலைமகள் புதல்வன்
திருந்திய பாடல் விரும்பினர்க் கல்லது
கடுந்துய ருட்புகக் கைவிளிக் கும்இந்
நெடும்பிற விக்கடல் நீந்துவ தரிதே.

1

 

1294. மும்மணிக் கோவை பற்றிய விளக்கம் மேல் தரப்பட்டது.

குறிப்புரை: "திங்கட் கொழுந்தொடு.... புரிபுன் சடையோன் - சிவபெருமான். பொங்கு அரவு - சினம் மிக்க பாம்பு. திளைத்தல் - விளையாடுதல். 'திங்களோடு பாம்பு விளையாடுதல் வியப்பு. கடுவரல் கலுழி வேகமாய் வருகின்ற வெள்ளம் - வெள்ளம் இருகரையிலும் பொன்னைச் சிதறுதலும், மலர்களை மலர்த்துதலும் இயல்பு. 'அவ்வாறு இங்கு வெள்ளத்தால் இரு கரைகளிலும் சிதறப்படும் பொன் இதழியும், (கொன்றை மலரும்) மலர்த்தப்படும் மலர் எருக்குமாம்' என்றபடி. இதழியின் செம்பொன் உருவகம். 'இன்' வேண்டாவழிச் சாரியை. புதல் - புதர். இருபிறப்பாளனும் அறுதொழிலாளனுமாகிய தமிழ் விரகன்' - என்க. 'முத்தி வேள்வியைக் கூறும் நான்மறை' என உரைக்க. "வேள்வு" என்பது, 'வி' என்னும் விகுதி பெறாமல், 'வு' என்னும் விகுதி பெறாமல், 'வு' என்னும் விகுதி பெற்று வந்த