வெண்பா 1298. | நிலத்துக்கு மேலாறு நீடுலகத் துச்சித் தலத்துக்கு மேலேதா னென்பர் - சொலத்தக்க சுத்தர்கள் சேர்காழிச் சுரன்ஞான சம்பந்தன் பக்தர்கள்போய் வாழும் பதி. | | 5 |
'திருவருளதனால் பிறந்தது..... கடிநகரதுவே; வளர்ந்தது.... உண்டே; பெற்றது..... வளர்ந்தது.... உண்டே; பெற்றது.... செம்பொன் தாளம் அவையே; தீர்த்தது.... விடமே; அடைத்தது.... கதவே; ஏறிற்று.. சிவிகை. முன்னாட் பெற்றே; பாடிற்று ஆண்பனையதனைப் பெண்பனையாவே; கொண்டது... பொன் ஆயிரமே; கண்டது.... சமணைப் பல் கழுமிசையே; நீத்தது அரன் அடி பரவும் தமிழ்ச் சுவையறியாத் தம்பங்களையே; நினைந்தது.... இக்கரை ஓடம் அக்கரைச் செலவே" எனக் கூட்டி யுரைக்க. பிறந்தது, வளர்ந்தது முதலாக வந்தன பலவும் இடம், செயப்படுபொருள் ஆகியவை வினை முதல் போலக் கூறப்பட்டனவாம். "நீத்தது நினைந்தது" என்பன தொழிற் பெயர்கள். எழுவாய் நின்று செயப்படு பொருட் பெயர்களாகிய பயனிலைகளைக் கொண்டன; "ஏறிற்று" என்பது "பெற்று" என்னும் வினையெச்சப் பயனிலை கொண்டது. "பாடிற்று" என்னும் எழுவாயும்" பெண்பனையாக என வினையெச்சப் பயனிலை கொண்டது. கொள வல்ல ஞானசம்பந்தன்' என்க. மிக்கவர் - ஞானமும், அன்பும் மிகப் பெற்றவர்; மேலோர். 'மிக்கவரது' என ஆறாவது விரிக்க. வாவி, இங்குச் சுனை. இனி, 'மானச சரோவரம்' என்னும் பொய்கையும் ஆம். சிலம்பு - மலை.போனகம் - திருமுலைப் பாலில் அளைந்த அடிசில். பேதுறு - வருந்திய. பெண், வணிகப் பெண். "கணவனை" என்பதை, 'கணவனுக்கு' எனத் திரித்து "தீர்த்தது" என்பதனோடு இயைக்க. அரசு - திருநாவுக்கரசர். இசையா - கூடி. குரைசேர் - ஒலித்தல் பொருந்திய. அத்தி - யானை. மா - குதிரை. விடு - ஒழுக விடுகின்ற. அவிழ் - வாய் உணவு - அள்ளற் பழனம் - சேற்றை யுடைய வயல். "கரியது, நகரது, திருவருளதனால்; ஆண் பனையதனை" என்பவற்றில் அது பகுதிப் பொருள் விகுதி, "தாளம் அவையே" என்பதில் "அவை" என்றதும் அது. இதுவும் நிலைமண்டில ஆசிரியப்பா. 1298. குறிப்புரை: "சொலத் தக்க" என்பது முதலாக எடுத்துக் கொண்டு உரைக்க. சொலத் தக்க - சிறப்பித்துச் சொல்லத் தக்க சுத்தர்கள் - மலம் நீங்கிய தூயோர்; முத்தர்கள். சுரன் - பூசுரன்.
|