பக்கம் எண் :

887ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை

கட்டளைக் கலித்துறை

1299.பதிகம் பலபாடி நீடிய பிள்ளை பரசுதரற்கு
அதிக மணுக்க னமணர்க்குக் காலன் அவதரித்த
மதியந் தவழ்மாட மாளிகைக் காழியென் றால்வணங்கார்
ஒதியம் பணைபோல் விழுவரந் தோசில வூமர்களே.

6

 

நிலம் - பூவுலகம். அதற்குமேல் உள்ள ஆறு நிலையான உலகங்களாவன, 'புவர் லோகம், சுவர் லோகம், மக லோகம், சனலோகம், தவ லோகம், சத்திய லோகம்' - என்பன.

புவர் லோகம் சூரிய சந்திர நட்சத்திர மண்டலங்களை யுடைய சுடர் உலகம். காற்று மண்டலம் இவற்றின் கீழாய் அடங்கும்.

சுவர் லோகம், இந்திராதி தேவர் வாழ் உலகம்.

மக லோகம் மரீசி முதலிய மகான்கள் வாழும் உலகம்.

சன லோகம், சன்னு முதலிய பொது ஞானியர் வாழும் உலகம்.

தவ லோகம், சனகர் முதலிய சிறப்பு ஞானியர் வாழும் உலகம்.

சத்திய லோகம் பிரம தேவனுடைய உலகம். திருமாலினுடைய வைகுந்தமும் இதனுடன் சேர்த்து ஒன்றாக எண்ணப்பட்டது.

இவற்றிற்கெல்லாம் மேலே உள்ளது சீகண்டருத்திரர் உலகம் அதுவும் சிவலோகமாகவே எண்ணப்படும்.

இவை யெல்லாம் சிவஞான மாபாடியத்துட் கண்டன.1 இவை பல்லூழி காலம் இருத்தல் பற்றி, "நீடுலகு" எனப் பட்டன. "உச்சித் தலத்துக்கு மேல்" என்றது, 'அவைகளுக்கு அப்பால்' என்றபடி. "தான்" என்பது தேற்றப் பொருளில் வந்தது. என்பர் - என்று சொல்லுவர் மெய்யுணர்ந்தோர். 'ஞான சம்பந்தருக்கு அடியவராகவே, ஞானம் எளிதில் கூடும்' - என்பது கருத்து.

1299. குறிப்புரை: "ஞானசம்பந்தர் அவதரிக்கப் பெற்றது காழிப்பதி" என்று சொல்லக் கேட்டால் அறிவிலிகள் சிலர் உடனே வீழ்ந்து வணங்காமலே நிற்பார்கள். அவர்கள் இறுதியில் ஒதிய மரத்தின் கிளை வீழ்வதுபோல யாதொரு பயனும் இல்லாமல் வீழ்வார்கள்" என்பது இதன் திரண்ட பொருள். 'ஞானசம்பந்தர்பால் தலையாய அன்பினை உடையர் ஆகாதார் இவ்வாறு ஆவர்' என்பதாம். தலையன்பினது நிலைமை.


1. சூ-2. அதி - 2.