அகவற்பா 1300. | கவள மாளிகைத் திவளும் யானையின் கவுள்தலைக் கும்பத் தும்பர்ப் பதணத் தம்புதந் திளைக்கும் பெருவளம் தழீஇத் திருவளர் புகலி விளங்கப் பிறந்த வளங்கொள் சம்பந்தன் | | 5 |
| முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்; | | மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்; | | பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்; | | பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்1 |
என்பதில் குறிக்கப்பட்டமை காண்க. "பதிகம் பல பாடி நீடிய பிள்ளை" என்றது, "பிள்ளைமைப் பருவத்திலே அளவற்ற திருப்பதிகங்களை அருளிச் செய்து அதனால் என்றும் நிலை பெற்றுள்ள புகழை யுடைய சிறிய பெருந்தகையார்' - என்றபடி. 'அப்புகழைக் கேட்டும் அவருக்கு அடியர் ஆகாதவரைப் பற்றி என்ன சொல்வது' என்பதாம். பரசு - மழு - தரன் - தரித்தவன்; சிவபெருமான். அணுக்கன் - நெருக்கமானவன். 'அவதரித்தது' எனற் பாலதனை, "அவதரித்த" - என உடம்பொடு புணர்தலாக்கிக் கூறினார். "பிள்ளை, அணுக்கன், காலன்" எனப்பட்ட பெயர்களை எடுத்தல் ஓசையாற் கூறி, அவரது அவதாரச் சிறப்பினை உணர்க. ஒதி, ஒருவகை மரம். இது நின்றாலாவது சிறிது நிழலைத் தரும்; வீழ்ந்தால் எந்த ஒன்றிற்கும் பயன்படாது. அதனால் வீழ்தலையே கூறினார். இது முற்காலத்தில் 'உதி' - என வழங்கப்பட்டது. அம், சாரியை. பணை - கிளை. அந்தோ, இரக்கக் குறிப்பு. "பலபாடி" - என ஓர் அடியின் இடையே மூவசைச்சீர் வந்தது. 1300. குறிப்புரை: இச் செய்யுள் அகப் பொருளில் களவியலில் நொது மலர் வரைவு முயல்வறிந்து தோழி செவிலிக்கு அறத்தொடு நின்ற துறையாகச் செய்யப்பட்டது.2 முதல் நான்கு அடிகளை, மாளிகைப் பதணத்து யானைத் தலைக் கும்பத்து உம்பர் அம்புதம் திளைக்கும் பெருவளம் எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.
1. திருமுறை - 6.25.7. 2. தொல் - பொருள் - களவியல் - சூ. "நாற்றமும் தோற்றமும்."
|