பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை890

வெண்பா

1301.பழியொன்றும் பாராதே பாயிடுக்கி வாளா
கழியுஞ் சமண்கையர் தம்மை - யழியத்
துரந்தரங்கச் செற்றான் சுரும்பரற்றும் பாதம்
நிரந்தரம்போய் நெஞ்சே! நினை.

8

 கட்டளைக் கலித்துறை

1302. நினையா தரவெய்தி மேகலை நெக்கு வளைசரிவாள்
தனையாவ வென்றின் றருளுதி யேதடஞ் சாலிவயல்
கனையா வருமேதி கன்றுக் கிரங்கித்தன் கால்வழிபால்
நனையா வருங்காழி மேவிய சீர்ஞான சம்பந்தனே.

9

 

இது, தோழி செவிலிக்குக் களிறு தருபுணர்ச்சியால் அறத்தொடு நின்றது.

1301. குறிப்புரை: சமணர் பழி ஒன்றையும் ஓராமை (நினையாமை) வைதிக மதத்தவர்மேல் அன்று கொண்டிருந்த காழ்ப்பு உணர்ச்சியினால் ஆம். அதற்கு, ஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்த திருமடத்திற்குத் தீக்கொளுவியதே போதிய சான்றாகும். ஒன்றும் - சிறிதும் திகம்பர சமணருட் சிலர் பாயை உடுத்தாமல் கையால் இடுக்கித் திரிந்தனர். "வாளா" என்றது, இருமையின்பத்தையும் இழந்தமை நோக்கியாம். அழிதல் - தோல்வியடைதல். துரந்து - ஓட்டி. அரங்க - தாமே நசுங்க, அரங்குதல் என்னும் தன் வினையே வலித்தல் பெற்று 'அரக்குதல்' என வருகின்றது. "சுரும்பு அரற்றும்" என்றது, 'தாமரை மலர் போன்றது' என்றபடி. நிரந்தரம் - இடை விடாமல். அந்தரம் - இடைவெளி. நிர்அந்தரம் - இடை வெளியின்மை. போய் - அருகணைந்து. நெஞ்சு அணை தலாவது பற்றுதல்.

1302. குறிப்புரை: இது பாடாண் திணைக் கைக்கிளைத் துறையாகச் செய்யப்பட்டது. இது புறப்புறக் கைக்கிளை.

"தடஞ் சாலி வயல்" - என்பது முதலாகத் தொடங்கி உரைக்க.

"நின்னை" - என்பது இடைக் குறைந்து "நினை" என நின்றது. ஆதரவு - ஆதரித்தல்; விரும்புதல் நெகுதலும், சரிதலும் ஆகிய சினை வினைகள் முதல்மேல் ஏற்றிச் சொல்லப்பட்ட சினையொடு ஒட்டிய பொருள்களும் ஒற்றுமை பற்றிச் சினையாகவே கருதப்படும். சரிவாள், வினையாலணையும் பெயர். தன், சாரியை. "ஆவ" என்பது இரக்கக் குறிப்பு இடைச் சொல். அருளுதி - இரங்குவாய், ஏகாரம் அசை. வினாவாக்கி உரைத்தலும் ஆகும். 'தட வயல்' என இயையும். தட பெருமை யுணர்த்தும் உரிச்சொல். சாலி - நெற்பயிர். வயல் வரும்