அகவற்பா 1306. | அவனிதலம் நெரிய வெதிரெதிர் மலைஇச் சொரிமதக் களிற்று மத்தகம் போழ்ந்து செஞ்சே றாடிச் செல்வன அரியே எஞ்சாப் படவர வுச்சிப் பருமணிபிதுங்கப் | 5 | பிடரிடைப்பாய்வன பேழ்வாய்ப் புலியே இடையிடைச் செறியிரு ளுருவச் சேண்விசும் பதனில் பொறியென விழுவன பொங்கொளி மின்னே உறுசின வரையாலறுந்திய கலுழிக் கரையா றுழல்வன கரடியின் கணனே நிரையார் | 10 | பொருகட லுதைந்த கரிமுகச் சங்கு |
"படைச் சால் வழியே" - என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. "திரளை" என்பது இங்குக் கிண்ணத்தைக் குறித்தது; ஆகுபெயர். சோனம் - மேகம். தரு, உவம உருபு. "சோனந் தரு குழலார்" என்றது தோழிமார்களை. எனவே, 'தலைவியர் கேட்பச் சொல்லிடாமுன்' - என்க. "கொற்றவனே"! (அறிவால் அறியத் தக்க ஞானத்தைக்) கிண்ணத்திலே பெற்று உண்டாய்" - என்னும் அதிசயத்தைத் தோழியர் தம் தலைவியர் கேட்ப நாடறியச் சொல்லும் முன்னே உனது பங்கயத் தாரினை (தாமரை மலர் மாலையை)க் கழற்றிக் கொடுத்துவிடு; (ஏனெனில், அதனைக் கேட்டவுடனே தலைவியர் ஆற்றாமையால் இறந்துபடுவர்) - என்பது இதன் பொருளாகும். "தலைவியர் கேட்ப" என்பது இசையெச்சம் இது 'மாலை யிரத்தல்' - என்னும் துறை. சுரும்புகட்குப் பானமாவது தேன்; அதனைத் தருவது பங்கயம் (தாமரை மலர்) தாமரை மாலை அந்தணருக்கு உரிய அடையாள மாலை. படைச் சால், உழுபடை உழுது சென்ற பள்ளம், கூன் நந்து - வளைவான சங்குகள். கொற்றவன் - தலைவன். 1306. குறிப்புரை: இஃது அகப் பொருளில் களவியலில், தோழி தலைவனை வரைவுகடாதல் வேண்டி வரவு விலக்கு வாள்; ஆறின்னாமை கூறி விலக்கிய துறையாகச் செய்யப் பட்டது. ஆறு இன்னாமை - வரும் வழி துன்பம் உடையது.
|