| செங்கயல் கிழித்த பங்கய மலரின் செம்மடல் நிறைய வெண்முத் துதிர்க்கும் பழனக் கழனிக் கழுமல நாடன் வைகையி லமணரை வாதுசெய் தறுத்த | 15 | சைவ சிகாமணி சம்பந்தன் வெற்பிற் சிறுகிடை யவள்தன் பெருமுலை புணர்வான் நெறியினில் வரலொழி நீமலை யோனே. | | 13 |
வெண்பா 1307. | மலைத்தலங்கள் தேறி வான்தவங்கள் செய்தும் முலைத்தடங்கள் நீத்தாலும் மூப்பர் - கலைத்தலைவன் |
"மலையோனே" என்றதை "நிரையார்" என்பதற்கு முன்னே கூட்டிப் பின்வரும் அடிகளையும் முதலில் வைத்து உரைக்க*. மலையோன் - வெ பன்; குறிஞ்சி நிலத் தலைவன். அவனி தலம் நெரிய - பூமியில் உள்ள இடங்கள் ஆங்காங்குக் குழியும்படி. மலைஇ - போர் செய்து. என்பது, 'செய்து கொண்டு சொரிகின்ற மதம்' என நிகழ்காலம் உணர்த்தி நின்றது. செஞ்சேறு - இரத்தத்தோடு கூடிய சேறு. அரி - சிங்கம், எஞ்சா - இளைக்காத. பேழ்வாய் - பெரியவாய். சேண் விசும்பு - உயரத்தில் உள்ள ஆகாயம். 'விசும்பினின்றும் மின் வீழ்வன' - என்க. அது, பகுதிப் பொருள் விகுதி. பொறி, தீப்பொறி. வரை - மலை. அது சினம் உடைத்தன்றாயினும் வெள்ளத்தைப் பொங்க விடுதல் பற்றிச் சினம் உடையது போலக் கூறப்பட்டது. இக்காலத்தவரும், 'இயற்கையின் சீற்றம்' - என்பர். உந்திய - வெளிப்படுத்தப்பட்ட கலுழி - (கான்யாற்று) வெள்ளம், கரையால் - கரை வழியாக. கணன் - கணம்; கூட்டம். இத்துணையும் ஆறின்னாமை கூறியது. இனிச் சீகாழிச் சிறப்பு. நிரை ஆர் - அலைகளின் வரிசை பொருந்திய கரையை மோதுதல் பொருதல் உதைந்த - கரையில் கொண்டு வந்து ஒதுக்கிய சுரி முகம் - வளைந்த முகம். 'சங்கு பங்கய மலரின் மடல் நிறைய முத்து உதிர்க்கும் கழனி' என்க. கிழித்த - மலர்த்திய. மடல் - இதழ். பழனம் - மருத நிலம். செம்மடல், வெண்முத்து - 'சிறுகு இடை பெருமுலை' - முரண் தொடைகள் 'புணர்வன வரல் ஒழி நீ' - என முடிக்க. 'இவ்வாறான நெறியினில்' என இசையெச்சம் வருவிக்க. 1307. குறிப்புரை: "முலைத் தலங்கள் நீத்தாலும்" என்றது, புறப் பற்றுக்களையெல்லாம் அறவே நீக்கினாலும்' - என்றபடி. "முலைத்
|