பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை896

கட்டளைக் கலித்துறை

1308,தாமரை மாதவி சேறிய நான்முகன் தன்பதிபோல்
காமரு சீர்வளர் காழிநன் னாடன் கவித்திறத்து
நாமரு வாதவர் போலழ கீந்துநல் வில்லிபின்னே
நீர்மரு வாத சுரத் தெங்ங னேகுமென் நேரிழையே.

15

அகவற்பா

1309.இழைகெழு மென்முலை யிதழிமென் மலர்கொயத்
தழைவர வொசித்த தடம்பொழி லிதுவே;
காமர்
சுனைகுடைந் தேறித் துகிலது புனையநின்
றெனையுங் கண்டு வெள்கிட மிதுவே
தினைதொறும்
5பாய்கிளி யிரியப் பையவந் தேறி
 

1308. குறிப்புரை: இஃது அகப் பொருள் உடன்போக்கில் நற்றாய் தலைவியது மென்மைத் தன்மை நினைந்து இரங்கிய துறையாகச் செய்யப்பட்டது. இன்னோரன்னவற்றை, 'அனை மருட்சி' என்பர்.

"நேரிழை" - என்பதை, 'மருவாதவர் போல" என்பதன் பின் கூட்டியுரைக்க. மா தவிசு - சிறந்த ஆசனம். நான்முகன் தன்பதி, சத்திய லோகம் சீகாழி 'பிரமபுரம்' எனப்படுதலால் அதனை, "நான்முகன் தன்பதி போல் சீர் வளர் காழி" - என்றார். சீர் வளர் -சிறப்பு மிக்க. கவித் திறத்து நா மருவாதவர் - பாடல் வகைகளில் நாப் பொருந்தாதவர்கள்; பாடாதவர்கள். "அவர்களே, மெய்வருந்தப் பெற்று, நீரும் நிழலும் இல்லாத பாலை வனத்தில் வாழ்வோராவர்" - என்பதாம். "ஈந்து" - என்றது, 'நீங்கப் பெற்று' என்றபடி. வில்லை - வில்லை ஏந்திக் காத்துக் கொண்டு போகும் தலைவன், "நீர் மருவாத சுரம்" - என்றது, சுரத்தினது இயல்பை எடுத்துக் கூறியவாறு. "நீர்மரு" என்பது ஆசெதுகை. நேர் இழை - நுணுகிய வேலைப்பாடு அமைந்த அணிகலம்.

1309. குறிப்புரை: இஃது அகப்பொருள் களவியலில் பகற் குறி இடையீட்டில் தலைவி செறிக்கப் பட்டமையின் தலைவன் குறியிடத்துச் சென்று தலைவியைக் காணாது, களம் நோக்கி மறுகுதலாகிய, 'வறுங்களம் நாடி மறுகல்' என்னும் துறையாகச் செய்யப்பட்டது.

இழை கெழு - அணிகலன்கள் பொருந்திய. "மென்முலை" என்பது அடையடுத்த ஆகுபெயராய்த் தலைவியைக் குறித்தது. பின்