பக்கம் எண் :

897ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை

ஆயவென் றிருக்கு மணிப்பர ணிதுவே
ஈதே
இன்புறு சிறுசொ லவைபல வியற்றி
அன்புசெய் தென்னை யாட்கொளு மிடமே
பொன்புரை
தடமலர்க் கமலக் குடுமியி லிருந்து
10நற்றொழில் புரியும் நான்முகன் நாட்டைப்

புற்கடை கழீஇப் பொங்கு சராவத்து
நெய்த்துடுப் பெடுத்த முத்தீப் புகையால்
நாள்தொறும் மறைக்குஞ் சேடுறு காழி
எண்டிசை நிறைந்த தண்டமிழ் விரகன்

15நலங்கலந் தோங்கும் விலங்கலின் மாட்டுப்

பூம்புன மதனிற் காம்பன தோளி
பஞ்சில் திருந்தடி நோவ
வஞ்சித் திருந்த மணியறை யிதுவே.

16

 

வரும் செயல்கட்கும் கொள்க. கொன்றை; கொன்றை மரம். இது முல்லை நிலக் கருப் பொருளாயினும்,

எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த ஆகும்.

என்பதனால் மலை நிலத்து வந்தது. திணை மயக்கம் அன்று. 'இதழியை ஒசித்த பொழில்' என்க. ஒசித்தல் - வளைத்தல். வளைத்தது பூவைப் பறித்தற் பொருட்டு. தழை வர - இலைகள் நிலத்திற் படும்படி. 'என்னையும்' என்பது இடைக் குறைந்து நின்றது. உம்மை, 'காண்டல் கூடாத என்னையும்' என உயர்வு சிறப்பு. தினை, அதன் கதிர்களைக் குறித்த ஆகுபெயர். "ஆய" என்பது கிளிகளை ஓட்டும் ஓசை. சிறு சொல் - இகழ்ச்சி யுரை. இஃது அன்பினால் சொல்லப்படுவது.

செறாஅச் சிறு சொல்லும், செற்றாற்போல் நோக்கும்
உறாஅர் போன்(று) உற்றார் குறிப்பு1

என்பது காண்க. சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை" தினைப்புனத்தில் வெகுளி பற்றி வந்தது.2 'பொன்புரை குடுமி" என இயைக்க. குடுமி, இங்குக் கேசரம். தொழில், படைத்தல். நாடு -


1. திருக்குறள் - 1097.
2. புறம் - 72.