பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை898

வெண்பா

1310.வேழங்க ளெய்பவர்க்கு வில்லாதல் இக்காலம்
ஆழங் கடல்முத்தம் வந்தலைக்கும் - நீள்வயல்சூழ்
வாய்ந்ததிவண் மாட மதிற்காழிக் கோன்சிலம்பிற்
சாய்ந்தது வண்தழையோ தான்.

17

கட்டளைக் கலித்துறை

1311.தழைக்கின்ற சீர்மிகு ஞானசம் பந்தன் தடமலைவாய்
அழைக்கின்ற மஞ்ஞைக் கலர்ந்தன கோடலம் பெய்திடுவான்
 

உலகம், புற் கடை - புல்லிய தலைவாயில். கழுவுதல் - தூய்மைப் படுத்தல். சராவம் - ஓமத்துள் நெய்யை விடும் அகப்பை. துடுப்பு - அவ் அகப்பையை மூடுவது. சேடு - பெருமை. விலங்கல் - மலை, 'விரகன் விலங்கல்' என்க. காம்பு - மூங்கில். காம்பன தோளி, தலைவி. இதனை, "பொன் புரை" என்பதற்கு முன்னே கூட்டுக. வஞ்சித் திருத்தல் - ஒளிந் திருத்தல். விளையாட்டுக்களில் ஒளிந்திருப்பதும் ஒன்று. மணி - மணிகளை உடைய. அறை - குகை.

1310. குறிப்புரை: இதுவும் அகப்பொருள் களவியலில் தலைவன், தலைவி, தோழி இருவரும் உள்வழிச் சென்று, "இவ் வழியாக அச்சம் உற்று ஓடிய யானை வந்ததா" - எனப் பொய்யாக வினாவ, தோழி அவன் கருத்தறிந்து நகை உண்டாகக் கூறுவதாகிய, "தோழி இறைவனை நகுதல்" - என்னும் துறையாகச் செய்யப்பட்டது.

"-(இவர் ஏந்தியிருப்பது தழை; வினாவுவது வேட்டத்தில் தப்பிய யானை. அதனால்,) இக்காலத்தில் யானையை எய்பவர்க்கு அம்பாய் அமைவது, சாய்ந்து துவள்கின்ற தழைதானோ" - என்பது இப்பாட்டின் பொருள்.

வில், ஆகுபெயராய், அதன்கண் தொடுக்கப்படும் அம்பைக் குறித்தது. 'ஆழ் கடல் அம் முத்தம்' என்க. அம் - அழகு. சீகாழி அக்காலத்தில் கடலைச் சார்ந்து இருந்தது. அதனால் அதன் அலைகள் முத்துக்களை வயல்களின் எறிந்தன. 'வயல் சூழ் காழி, மாடக் காழி, மதிற் காழி' எனத் தனித் தனி இயைக்க. வாய்ந்த - வாய்ப்பான (மாடம்), திவளுதல் - ஒளி வீசுதல். இதுவும் மாடத்திற்கே அடை. காழிக் கோன், ஞானசம்பந்தர். சிலம்பு - மலை. 'துவள்தழை' என்பது எதுகை நோக்கிச் செய்கை வேறுபட்டது. ஓகாரம், இழிவு சிறப்பு. தான், அசை.

1311. குறிப்புரை: இஃது அகப் பொருள் கற்பியலில் "கார் காலத்து வருவேன்" எனக் கூறிப் பிரிந்த தலைவன் அக்காலம் வந்தும்