| இழைக்கின்ற தந்தரத் திந்திர சாபம்நின் னெண்ணமொன்றும் பிழைக்கின்ற தில்லைநற் றேர்வந்து தோன்றிற்றுப் பெய்வளையே. |
அகவற்பா 1312. | வளைகால் மந்தி மாமரப் பொந்தில் விளைதே னுண்டு வேணுவின் துணியால் பாறை யில்துயில்பனைக்கை வேழத்தை உந்தி யெழுப்பு மந்தண்சிலம்ப அஃதிங்கு | 5 | என்னைய ரிங்கு வருவர் பலரே |
வாராமையால் ஆற்றாளாய தலைமகட்குத் தோழி அவன் வரவுணர்த்திய துறையாகச் செய்யப்பட்டது. "பெய் வளையே" என்பதை முதலிற் கொள்க. இது தோழி தலைவியை விளித்தது. தட மலை - பெரிய மலை. வாய், ஏழன் உருபு. 'அழைக்கின்ற மஞ்ஞைக்கு" என்பதை, 'மஞ்ஞை அழைக்கின்றதற்கு என மாற்றிக் கொள்க. இதன்கண் உள்ள நான்கன் உருபை வினை செய்யிடப் பொருளதாகிய கண்ணுருபாகத் திரித்து, 'அழைக்கின்ற பொழுதாகிய இப்போது' எனப் பொருள் கொள்க. அழைத்தல் - அகவுதல். மயில் அகவுதல் முகில் வருகையைத் தெரிவிக்கும். கோடல் - காந்தள். இது குறிஞ்சி நிலத்தில் மழைக் காலத்தில் பூக்கும். 'கோடல் அலர்ந்தன' என்க. 'அம்பு எய்தல்' என்பது சிலேடை வகையால், மேகம், கோடையாகிய பகைவன்மேல் அம்பெய் வதாகப் பொருள் தரும். அம்பு - கணை; நீர். 'இக் கணைக்கு ஏற்புடையவில் வானவில்' என்பது, "அந்தரத்து இந்திர சாபம்" என்பதனால் குறிக்கப்பட்டது. அந்தரம் - ஆகாயம். சாபம் - வில். "இவை யெல்லாம் நிகழ்ந்து முடிவதற்கு முன்னே நல்லவருடைய தேர் வந்து தோன்றி விட்டது. அதனால், இப்பருவத்தில் தலைவர் வருவார் - என்று உறுதியாக எண்ணி யிருந்த உன் எண்ணம் ஒன்றும் (சிறிதும்) தவறவில்லை". என்க. "அம்பு எய்திடுவான் இந்திர சாபத்தை இழைக்கின்றது" என்பதற்கு 'மேகம்' என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. எய்திடுவான், வான் ஈற்று வினை யெச்சம். 1312. குறிப்புரை: இ ஃது, அகப் பொருள் களவியலில் தோழியிற் கூட்டத்தில் தலைவன் தோழியைக் குறையிரந்து நிற்கக் குறை நேரும் தோழி அதற்குத்தான் அச்சம் உற்றவளாய் தலைவனையும் அஞ்சுவித்தலாகிய அஞ்சி அச்சுறுத்தல் துறை யாகச் செய்யப்பட்டது.
|