பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை900

அன்னை காணி லலர்தூற் றும்மே
சிறுபரற் கரந்த விளிகுரற் கிங்கிணி
சேவடி புல்லிச் சில்குர லியற்றி
அமுதுண் செவ்வா யருவி தூங்கத
10 தாளம் பிரியாத் தடக்கை யசைத்துச்

சிறுகூத் தியற்றிச் சிவனருள் பெற்ற
நற்றமிழ் விரகன் பற்றலர் போல
இடுங்கிய மனத்தொடு மொடுங்கிய சென்று
பருதியுங் குடகடல் பாய்ந்தனன்

15கருதிநிற் பதுபிழை கங்குலிப் புனத்தே.

19

 

வளை கால் மந்தி - மரம் ஏறுதலால் வளைந்த காலை யுடைய பெண் குரங்கு. வேணுவின் துணி - மூங்கிலை முறித்துக்கொண்ட கழி. வேழம் - யானை. சிலம்ப - வெற்பனே.

"பெண் குரங்கு தேனை உண்ட மயக்கத்தால் மூங்கிலை முறித்துக் கொண்ட கழியால் அருகில் துயிலும் யானை எழுப்பப்படுகின்றது" என்றதனால், "தலைவியது இல்லில் உண்டு வாழ்ந்த கடமை உணர்ச்சியை யுடைய என்னால் என்பால் வந்து விளைவது அறியாது மயங்கி நிற்கின்ற நீ அறிவுறுத்தப் படுபவனாயினை எனத் தோழி உள்ளுறை உவமம் கூறினாள்.

அஃது இங்கு - உனது நாட்டிற்குச் சொன்ன அந்த இயல்பு இங்கும் உள்ளது. 'அதனை நீ அறி' என்பது இசையெச்சம். இங்கு - இவ்விடத்தில் என் ஐயர் பலர் வருவர். ஐயர் - தலைவன்மார், ஏகாரம், அசை. அலர் -பழி. "தூற்றும்மே" என்பதில் மகர ஒற்று விரித்தல். தேற்றேகாரம், அச்சத்தைக் குறித்தது. பரல் - சதங்கையின் உள்ளிடு மணி. "கரந்த பரல்" என மாற்றிக் கொள்க. விளி - விளிக்கின்ற; கூப்பிடுகின்ற. கிங்கிணி - சதங்கை. "கிங்கிணியைச் சேவடியில் புல்லி (பூட்டி)" என்க. அமுது - (பெற்ற தாயார் உண்பித்த) பால் "அருவி" என்றது வாய் ஊறலை. தாளம் - சப்பாணி கொட்டுதல். கூத்து - குதிப்பு. "சில் குரல் இயற்றி" என்பது முதல் "இயற்றி" என்பதுகாறும் ஞானசம்பந்தர் தம் தந்தையார் சிவபாத இருதயரைக் காணாது அழுத அழுகைக் காட்சி விளக்கப்பட்டது. 'அவ் அழுகையானே சிவனருள் பெற்ற நற்றமிழ் விரகன்' என்க. இறைவனை "அழுதழைத்துக் கொண்டவர்"1 எனச் சேக்கிழாரும் கூறினார். பற்றலர் - பகைவர். 'இடுகிய' என்பது "இடுங்கிய" என விரித்தல் பெற்றது. ஒடுங்கிய - ஒடுங்குதற்கு; மறைதற்கு, "பாய்ந்தனன்" என்றது, விரைவு பற்றி எதிர் காலம் இறந்த காலமாகச்


1. பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 182.