வெண்பா 1313. | தேம்புனமே!யுன்னைத் திரிந்து தொழுகின்றேன் வாம்புகழ்சேர் சம்பந்தன் மாற்றலர்போல் - தேம்பி அழுதகன்றா ளென்னா தணிமலையர் வந்தால் தொழுதகன்றா ளென்றுநீ சொல். | | 20 |
கட்டளைக் கலித்துறை 1314. | சொற்செறி நீள்கவி செய்தன்று வைகையில் தொல்லமணர் பற்செறி யாவண்ணங் காத்தசம் பந்தன் பயில்சிலம்பில் கற்செறி வார்சுனை நீர்குடைந் தாடுங் கனங்குழையை இற்செறி யாவண்ணம் காத்திலை வாழி!யிரும்புனமே. | | 21 |
சொல்லப்பட்டது. கருதி - யாதொன்றையும் நினைத்து. 'கங்குற்கண்' என ஏழாவது இறுதிக்கண் தொக்கது. 1313. குறிப்புரை: இஃது அகப் பொருள் களவியல் பகற் குறியில் தோழி தலைவன் சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுக்கும் வகைகளுள் ஒன்றாகிய புனம் நோக்கிக் கூறியதாகச் செய்யப் பட்டது. தேம் புனம் - தேனை உடைய புனம். திரிந்து - வலம் வந்து. "அணி மலையர் வந்தால்" என்பதனை இதன்பின் கூட்டுக. மலையர் - வெற்பர். குறிஞ்சி நிலத் தலைவன். வாம் புகழ் - வாவும் புகழ்; எங்கும் பரவிய புகழ். 'வான் புகழ்' - எனப் பாடம் ஓதலும் ஆம். 'அழுது அகன்றாள்'எனக் கூறினால். 'உறவு இழக்கப்பட்டதாகும்' என்னும் கருத்தினால் அதனை விலக்கி, 'தொழுது அகன்றாள்' எனக் கூறுமாறு கூறினாள். இதனால் தலைவனுக்கு ஆறுதல் உண்டாகும். "சொல்லு" என்பதும் பாடம். 1314. குறிப்புரை: இச் செய்யுளும் முன்னைச் செய்யுளின் துறையாகவே செய்யப்பட்டது. இங்கு, "பல்" என்றது, சொல்லைக் குறித்து, 'அவன் பல் பலித்தது' என்றும், 'பற்போனமையால் சொற்போயிற்று' என்றும் வழக்கத்தில் வழங்குதல் காண்க. செறிதல் - சேர்தல்; வெற்றி பெறுதல். படர் - விசாலித்த. கல் சுனை - கற்களுக்கு இடையே உள்ள சுனை. வார் - நீண்ட கனங் குழை - கனமாகிய காதணியை உடைய தலைவி. இரும்புனம் - பெரிய புனம். 'புனமே! கனங்குழையை (அவள் தமர்) இற்செறியா வண்ணம் காத்திலையே; நீ வாழி' என வினை முடிக்க. காவாமை முற்றி முதிர்ந்ததால் உண்டாயிற்று. வாழி, இகழ்ச்சிக் குறிப்பு.
|