பக்கம் எண் :

903ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை

வெண்பா

1316.அலைகடலின் மீதோடி யந்நுளையர் வீசும்
வலைகடலில் வந்தேறு சங்கம் - மலர்கள்தலை
வெண்முத் தவிழ்வயல்சூழ் வீங்குபுனற் காழியே
ஒண்முத் தமிழ்பயந்தா னூர்.

23

 கட்டளைக் கலித்துறை

1317.ஊரும் பசும்புர வித்தே ரொளித்த தொளிவிசும்பில்
கூரு மிருளொடு கோழிகண் துஞ்சா கொடுவினையேற்
 

பாம்பு. இஃது இனம் உள்ள அடை, அகடு - வயிறு. வெயில் வெப்பம் மிகுதியால், தரை மேல் ஊாந்து செல்லும் பாம்பின் அடி உடல் தீய்வதாயிற்று. பாலை நிலத்தில் பாடுவன பருந்தும், கழுகும், 'அவற்றது குரல் 'பஞ்சுரம்' என்னும் பண்போன்றன' என்க. இப்பண் குறிஞ்சியின் உட்பிரிவாய்ப் பாலைக்கு உரிமையுடையது. "கலைக் குறம்பின் முடுகு நாற்றமும், அரலின் வயிறு தீய்கின்ற வெப்பமும் ஆகிய இவற்றிடையே கள்ளிக் கிளைகளில் பஞ்சுரப் பண்ணைக் கேட்டு நன்கு உறங்குகின்ற புறாவே" - என்றதானால், "நீ என் மகளைச் சுரத்திடைப் போதலை விலக்காமை வியப்பன்று" என்பதனைக் குறிப்பால் உணர்த்தியவாறு. 'நீ (எமக்கு) உறவாவாய் அல்லை' - என்க. பொறி - புள்ளி. காண், முன்னிலை யசை. நறை - தேன். தேம் - இனிமை. அசைத்த - இறுகக் கட்டிய. அணி - அழகு 'அணி பொற் குன்றம்' என மாற்றிக் கொள்க. 'பொற் குன்றம்' என்றதும் ஞான சம்பந்தரை. உருவகம். மானம் - அபிமானம்; பற்று. மண்மிசை - இவ்வுகத்தில், "இவ்வுலகத்தில் 'பற்று' எனப்படுவது ஒன்றையும் இல்லாது விடுத்த ஞானசம்பந்தன்" - என்க. 'நயவார் கிளைபோல், வஞ்சி மருங்குற் கிள்ளை ஏதிலன் பின் (சுரத்திற்) செல்ல' - என உரைக்க. "மனை பிரியாத" - என்றது, 'ஒரு ஞான்றும் வெளிச் சென்று அறியாதவள்' என்பதைக் குறித்தது. வஞ்சி - கொடி. மருங்குல் - இடை. 'மருங்குலையும், அழகிய சொல்லையும் உடைய கிள்ளை' - என்பதாம். கிள்ளை - கிளி; உவம ஆகுபெயர். ஏதிலன் - அயலான். ஈற்றடி முடிந்தது முடித்தல்.

1316 குறிப்புரை: முத்தமிழ் பயந்தான், ஞானசம்பந்தர் 'அவரது ஊர் காழியே' என்க. இங்ஙனம் கூறியதனால் காழியது சிறப்பு உணர்த்தப்பட்டது.

'கடலில் வந்து ஏறு சங்கம் நுளையர் வீசும் வலையிலும், மலர்கள் தலையிலும் முத்தை அவிழ்க்கும் வயல்' என்க. வீங்கு - மிகுந்த.