| காரு முணர்ந்திலர் ஞானசம் பந்தனந் தாமரையின் தாருந் தருகில னெங்ஙனம் யான்சங்கு தாங்குவதே. | | 24 |
அகவற்பா 1318. | தேமலி கமலப் பூமலி படப்பைத் தலைமுக டேறி யிளவெயிற் காயும் சுவடிச் சிறுகாற் கற்கட கத்தைச் சுவடிச் சியங்கும் சூல்நரி முதுகைத் | 5 | துன்னி யெழுந்து செந்நெல் மோதுங் காழி நாட்டுக் கவுணியர் குலத்தை வாழத் தோன்றிய வண்டமிழ் விரகன் தெண்டிரைக் கடல்வாய்க் காண்தகு செவ்விக் களிறுக ளுகுத்த | 10 | முட்டைமுன் கவரும் பெட்டையங் குருகே வாடை யடிப்ப வைகறைப் போதில் தனிநீ போந்து பனிநீர் ஒழுகக் கூசிக் குளிர்ந்து பேசா திருந்து மேனி வெளுத்த காரண முரையாய் | 15 | இங்குத் தணந்தெய்தி நுமரும் இன்னம்வந் திலரோ சொல்லிளங் குருகே. | | 25 |
1317. குறிப்புரை: இப்பாட்டுப் பிறர் கூற்றாய் வாராது; தலைவி கூற்றாய் வந்தமையின், பாடாண் கைக்கிளையாகாது, அகப்புறக் கைக்கிளையாய் "உட்கோள்"1 என்னும் துறையின தாம். ஊரும் - ஏறிச் செல்கின்ற. பசும் புரவி - பச்சைக் குதிரை இவை பூட்டப்பட்ட தேர் சூரியனுடையது. கூரும் - மிகுகின்ற இருளொடு கண் துயிலாது கூவுகின்ற கோழி யாமக் கோழி. கொடு வினையேற்கு - கொடிய வினையை உடையேனாகிய என் பொருட்டாக. ஆரும் உணர்ந்திலர் - (தோழி உட்பட) யாரும் விழித்திருக்கவில்லை. சங்கு - சங்க வளையல். 1318. குறிப்புரை: இஃது அகப் பொருட் களவியலில் ஒருவழித் தணத்தலாகப் பிரிந்த தலைவன் வரவு நீட்டிக்கத் தலைவி இரங்கிய காமம் மிக்க கழிபடர் கிளவியாகச் செய்யப் பட்டது. கழி படர் - மிக்க துன்பம். துன்ப மேலீட்டால் தன் சொற் - கேட்க மாட்டாத
1. புறப்பொருள் வெண்பாமாலை - 296.
|