பக்கம் எண் :

905ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை

வெண்பா

1319.குருகும் பணிலமுங் கூன்நந்துஞ் சேலும்
பெருகும் வயற்காழிப் பிள்ளை - யருகந்தர்
முன்கலங்க நட்ட முடைகெழுமி இன்னம்
புன்கலங்கல் வைகைப் புனல்.

26

 

பொருளை நோக்கியும் கூற்று நிகழும். இது குருகோடு இரங்கியது குருகு - நீர்ப் பறவை.

"இளங் குருகே" - என்பதை முதலிற் கொள்க. தே மலி - தேன் நிறைந்த. படப்பை - தோட்டம். தலை, ஏழன் உருபு. முகடு - மேட்டு நிலம். கவடி - பலகறை. இது நண்டின் கால்களுக்கு உவமை. கற்கடகம் - நண்டு. சுவடித்தல் - தின்னுதல். 'சுவடித்து' என்பது, "சுடிச்சு" எனப் போலியாயிற்று. நண்டினை விரும்பித் தின்னுதல் நரிக்கு இயற்கை. சூல் நரி - கருவுற்ற நரி. 'நரியின் முதுகைச் செந்நெற் கதிர் எழுந்து மோதும் காழி' என்க. "குலத்தை" என்பதில் ஐ சாரியை. இனி இவ்வாறு கொள்ளாமல், 'வாழ்விக்க' என்பதில் பிறவினை விகுதி தொகுத்தலாக, "வாழ" என வந்தது என்றலும் ஆம். காழி தமிழ் விரகனுக்கு உரித்து ஆயினமையின், அதனை யடுத்த கடலும் உரித்தாயிற்று. கடல் வாய் - கடலின் அடை கரை. 'அதன் கண் பெருங் குருகு - பெரிய நீர்ப்பறவை. உகுத்த - இட்ட களிறு - ஆண் சுறா. 'பெரிய நீர்ப் பறவை கடலின் அடை கரையில் இட்ட முட்டையை ஆண் சுறா முன் ஏறிக் கவர்கின்றது; (அதனை அப்பறவை நோக்காது சோர்ந்துள்ளது என்க. "பனி சொரிகின்ற இவ் இரவில் நீ துணையோடன்றித் தனியே போந்து உடல் கூசி, குளிர் உற்று வாயடைத்து உடல் வெளுத்திருக்கின்றாய். இவ் இரண்டிற்கும் என்ன காரணம்? சொல். (என்னைப் பிரிந்து சென்ற என் தலைவர் இன்னும் வாராதது போல, உங்கள் தலைவரும் உங்களைப் பிரிந்துபோய் இன்னும் வரவில்லையோ?" என்க. 'பெருங் குருகின் முட்டையைச் சுறாமீனும் விரும்புகின்றது' அதன் பெருமை கூறப்பட்டது. இயல்பிலே சோர்வுற்றுப் பெருங் குருகு சிறுதுயில் கொள்வதனையும், இயல்பிலே இளங் குருகு நிறம் வெளுத்திருப்பதையும் தலைவி தனது கழிபடர் காரணமாக ஆற்றாமையால் விளைந்தனவாகக் கருதினார்.

1319. குறிப்புரை: 'வைகைப் புனல் இன்னம் புன்கலங்கல் தெறியாதிருப்பது, முன் காழிப் பிள்ளை அருகந்தர் கலங்க நட்டமுடை கெழுமி' எனக் கூட்டி முடிக்க.

குருகு - நீர்ப்பறவை. பணிலம் - சங்கு. கூன் நந்து - கூன் பொருந்திய நத்தை. கூன், முதுகில் உள்ள ஓட்டின் தோற்றம். சேல் -