கட்டளைக் கலித்துறை 1320. | புனமா மயில்சாயல் கண்டுமுன் போகா கிளிபிரியா இனமான் விழியொக்கும் மென்றுவிட் டேகா விருநிலத்துக் கனமா மதிற்காழி ஞானசம் பந்தன் கடல்மலைவாய்த் தினைமா திவள்காக்க வெங்கே விளையுஞ் செழுங்கதிரே. | | |
அகவற்பா 1321. | கதிர்மதி நுழையும் படர்சடை மகுடத் தொருத்தியைக் கரந்த விருத்தனைப் பாடி முத்தின் சிவிகை முன்னாட் பெற்ற அத்தன் காழிநாட்டுறை யணங்கோ மொய்த்தெழு | 5 | தாமரையல்லித் தவிசிடை வளர்ந்த |
கெண்டை மீன். அருக முனிவர்கட்கு, 'அருகந்தர்' என்பதும் பெயர். முடை கெழுமி - முடை நாற்றம் உடைய இரத்தம் முதலியன பொருந்தி நடப்பட்டது கழு மரம் ஆதலின் அவற்றின்கண் ஏறினாரது உடல் அழிவவாயின. நடுதலுக்குச் செயப்படு பொருள் வருவிக்க. "நட்ட" என்னும் பெயரெச்சம் காரணப் பொருட்டாய், "முடை" என்னும் காரியப் பெயர் கொண்டது, 'உண்ட இளைப்பு' என்பது போல. 1320. குறிப்புரை: இஃது அகப்பொருள் களவியலில் பகற் குறி பற்றித் தலைவியது வேறுபாடு கண்டு ஐயுற்று, 'தினைக் காவல் நன்கு போற்றப்படாதது என்னை' என வினவிய செவிலிக்கு, ஐயச் செய்கை மறுத்துப் பிறிது காரணங் கூறித் தெளிவித்த துறையாகச் செய்யப்பட்டது. இவள் காக்க - இவள் தினைப் புனம் காக்கும் பொழுது "(எவ்வளவு கடிந்து ஓட்டினாலும்) மயில்கள் இவள் சாயலைக் கண்டு போகின்றில. கிளிகள் (இவள் சொற்கேட்டுப்) போகின்றில, மான் இனம், 'இவள் கண் நம் கண் ஒக்கும்' என்று இவ்விடம் விட்டுப் போகின்றில. ஆதலின் தினை செழுங் கதிர் எங்கே விளையும்" என்க. கனம் - மேகம். 'திண்மை' எனினும் ஆம். கடல் மலை - கடலை அடுத்துள்ள மலை. நெய்தலொடு குறிஞ்சி மயங்கிய திணை மயக்கம். "எங்கே" என்பது, 'எப்படி' என்னும் பொருட்டு. 1321. குறிப்புரை: இஃது அகப் பொருள் களவியலில் தலைவன் முதற்கண் கண்ட காட்சிக்குப் பின் 'இம்மகள் மானுட மகளோ, தேவ மகளோ' என ஐயுற்ற ஐயத் துறையாகச் செய்யப்பட்டது.
|