பக்கம் எண் :

907ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை

காமரு செல்வக் கனங்குழை யவளோ
மீமருத்
தருவளர் விசும்பில் தவநெறி கலக்கும்
உருவளர் கொங்கை யுருப்பசி தானோ
வாருணக் கொம்போ மதனன் கொடியோ
10ஆரணியத்து ளருந்தெய்வ மதுவோ


வண்டமர் குழலும் கெண்டையங் கண்ணும்
வஞ்சி மருங்குங் கிஞ்சுக வாயும்
ஏந்திள முலையுங் காந்தளங் கையும்
ஓவியர் தங்க ளொண்மதி காட்டும்

15வட்டிகைப் பலகை வான்துகி லிகையால்

இயக்குதற் கரியதோர் உருவுகண் டென்னை
மயக்கவந் துதித்ததோர் வடிவிது தானே.

28

 

"வண்டமர் குழலும்" என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. கதிர் - நிலாக் கதிர். மதி - பிறை. "ஒருத்தி" என்றது கங்கா தேவியை. விருத்தன் - மேலானவன். இது, 'முதுமை யுடையோன் தன் தேவியறியாதவாறு வேறொருத்தியை மறைத்து வைத்துள்ளான்' என்பதொரு நயத்தைத் தோற்று வித்தது. அத்தன் - தலைவன். நாட்டுறை அணங்கு - ஊர்த் தேவதை. அல்லி - அக இதழ். தாமரை மலர் ஆசனத்தில் வளர்ந்த கனங் குழையவள் - இலக்குமி. மீத் தரு தேவ லோகத்துப் பஞ்ச தருக்கள். மரு - நறுமணம். உரு - அழகு உருப்பசி; ஊர்வசி. முனிவர்களது தவத்தைக் கெடுத்தற்கு இவள் இந்திரனால் அவ்வப் பொழுது ஏவப்படுதல் பற்றி, "தவ நெறி கலக்கும் உருப்பசி" என்றார். தான், அசை, வாருணக் கொம்பு - நீரர மகள், மதனன் கொடி - மன்மதன் தேவி; இரதி. இது காதல் கொள்ளாக் காலத்து எழும் எண்ணம் ஆதலின், "மதனன் கொடியோ" என ஐயுறுதல், குற்றமாகாதாயிற்று. ஆரணியத்துள் அருள் தெய்வம் - வன தேவதை. அது, பகுதிப் பொருள் விகுதி. மருங்கு - இடை. கிஞ்சுகம் - சிவப்பு. 'குழல் முதலிய உறுப்புக்கள் பலவும், திறம் வாய்ந்த ஓவியரால் தீட்டப்பட்டனபோல உள்ளன' என்றற்கு. "ஓவியர் தங்கள் ஒண்மதி காட்டும் உருவு" என்றான். வட்டிகைப் பலகை - ஓவியம் தீட்டும் பலகை. வான் - சிறந்த துகிலிகை - எழுதுகோல். 'ஓவியர் பலகையில் துகிலிகையால் தங்கள் ஒண்மதி காட்டும் உருவு' எனக் கூட்டுக. 'ஒண்மதி காட்டும் உரு ஓவிய உரு' என்பான், "இயக்குதற்கு அரியது ஓர் உரு" என்றான் "கண்டு" என்னும் செய்தென் எச்சம் காரணப் பொருட்டாய், 'காண்டலாலே' எனப் பொருள் தந்தது. 'காட்சி ஒன்றானே மயங்கிற்று' என்றதனால்,