பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை908

வெண்பா

1322.வடிக்கண்ணி யாளையிவ் வான்சுரத்தி னூடே
கடிக்கண்ணி யானோடும் கண்டோம் - வடிக்கண்ணி
மாம்பொழில்சேர் வைகை யமண்மலைந்தான் வண்காழிப்
பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு.

29

கட்டளைக் கலித்துறை

1323.குருந்தும் தரளமும் போல்வண்ண வெண்ணகைக் கொய்மலராள்
பொருந்தும் திரள்புயத் தண்ணல்சம் பந்தன்பொற் றாமரைக்கா
 

'இது வியப்பு' என்பது குறிப்பெச்சமாயிற்று. 'தேவ மகள்' என்றே எண்ணாமல், 'மானுட மகளே' என்னும் எண்ணமும் உடன் நிகழ்தலின், மயக்கம் தோன்றிற்று. 'ஒரு வடிவாகிய இது அணங்கோ - அருந்தெய்வமதுவோ' - என முடிக்க. ஐயக் கிளவிகளில் உயர்திணையும், அஃறிணையுமாக விரவி எண்ணுவான் ஆகலின், முதற்கண் 'இவள் ஒருத்தி' என்னாது "ஓர் வடிவு இது" என அஃறிணையாகக் கூறினான்; என்னை? திணை ஐயத்திற்கு 'உருபு' முதலியன ஐயப் புலப் பொதுச் சொற்கள் ஆதலின்1

1322. குறிப்புரை: இஃது அகப்பொருள் களவியலில் உடன் போக்கின்கண் தலைவியைச் செவிலி பின் தேடிச் செல்லுங் கால் கண்டோரை வினவ, அவர்கள் செவிலிக்குக் கூறிய துறையாகச் செய்யப்பட்டது.

வடிக் கண்ணி - மாவடுவைப் போலும் கண்களை யுடையவள்; தலைவி. கடிக் கண்ணியான் - நறுமணம் கமழும் முடி. மாலையை உடையவன்; தலைவன். பின் வந்த "வடிக் கண்ணி" என்பதை - 'கண்ணி வடி' என மாற்றி, 'மாலை போலும் வடுக்களையுடைய மாம் பொழில்' எனப் பொழிலுக்கு அடையாக்குக. 'பொழில் சேர் வைகை' என்க. வைகையில் அமணரை மலைந்தவர் ஞானசம்பந்தர் 'பூம்பொழிலே புக்குச் சேர்ந்திருப்பார்' - என உரைக்க. இதற்கு 'அவர்கள்' என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க. எனவே, 'மீளுதலே நீர் செய்யத் தக்கது' என்பது குறிப்பெச்சம்.

1323. குறிப்புரை: இது பாடாண் திணைக் கைக்கிளைத் துறை. செவிலி கூற்று. குருந்து - குருத்து ஓலை. இதுவும் வெண்மை நிறம்


1. தொல் - சொல் - கிளவியாக்கம். "உருபென மொழியினும்"